பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

பாடுவார்

ஒரு முறை நான் கிராமத்திலே நடந்து சென்று கொண் டிருந்தேன். மாலை நேரம். அப்பொழுது ஒரு வீட்டுத் திண்ணையிலே இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெண் திடுமென்று, "நேரம் ரொம்பு ஆகிவிட்டது. இன்னும் நான் சமையல்கூடச் செய்யவில்லை, எங்க வீட்டுக்காரர் வந்தால் பாடுவார் என்று சொன்னாள். குறித்த நேரத்தில் சமையல் ஆகவில்லை என்றால் கணவன் வந்து கோபத்தில் திட்டுவான் என்பதைத்தான் 'அவர் பாடுவார்' என்று அவள் சொல்லுகிறாள். இசை!

பிச்சைக்காரன் வாசற்படியிலே வந்து 'அம்மா.... : பிச்சை போடு...' என்று கேட்பான். ஆண்களாக இருந்தால் கையிலே இருக்கும் காசைப்போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். பெண்களோ, அவனிடம் 'ஒரு பாட்டுப் பாடேன்' என்று கேட்பார்கள். இசைஞானம்!


பாடும் இடம்

ஒரு நாள் காலையில் ஒன்பது மணிக்கு நான் நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு தண்ணீர் குழாய். அதற்குப் பக்கத்திலே அநேகப் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பெண்மணிகளுக்குள் பயங்கரமான சண்டை வந்துவிட்டது. அதிலே ஒரு பெண் "சாக்கிரதையாகப் பேசுடீ, எங்கிட்டே பாட்டு வாங்கிக் கட்டிக்காதே என்று சொல்லுகிறாள். அப்போ அவள் கட்டிக்கிற அளவுக்கு இவள் பாடுவாள் என்றா அர்த்தம்? இல்லை, இவள் திட்டப் போகிறாள், அதை இவள் கேட்டுக் கொள்ள வேண்டும். நான் திட்டுவேன்" என்று சொல்லாமல் 'என்னிடத்திலே நீ பாட்டு வாங்கிக் கட்டிக்காதே' என்று சொல்கிறாள். இசை வளர்ச்சி!