பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

புகைப்படம்

நாமெல்லாம் போட்டோ எடுத்துக்கொள்ளுகிறோம். அதை நம் வீட்டிலே கண்ணாடி போட்டு மாட்டி. வைத்துக் கொள்கிறோம். அநேகமாக நாம் எல்லோருமே நமது வீட்டுச் சுவர்களிலே படமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறோம்! சில பேர் மனைவியோடு சேர்ந்து படமெடுத்து சுவரிலே தொங்குவார்கள்.

ஏன் போட்டோ எடுத்துக்கொள்கிறோம் என்றால், நமக்குத் தெரியாது. கேட்டால் ரொம்பப்டோர் 'என் போட்டோ இருக்கட்டும்ங்க' என்று மட்டுமே சொல்வார்கள். சரி நம் 'போட்டோ ' இருக்கட்டும், உருவப் படம் திறக்கிறோமே அதற்கு வருவோம். ஏன் படம் திறக்கிறோம்? அந்தப் படத்துக்கு அப்படி என்ன அத்தனை மரியாதை?

யார் தர்மம் செய்து, புண்ணியம் செய்து பெயரும் புகழோடும் இருக்கிறார்களோ, அவர் படத்தைத் திறப்பதற்குப் பதிலாக அவரையே திறக்க வேண்டியது தானே!... அவரைக் கூப்பிட்டு நாற்காலியில் உட்காரவைத்து , 'இந்த நாட்டுக்கு இத்தனை தர்மம் செய்திருக்கிங்க .... எல்லாரும் உங்கள் மேல் பிரியமா இருக்கிறாங்க... உங்களை மத்தியானம் மூணு மணிக்கு நாங்க திறக்கப் போறோம்' என்று சொல்லி ஒரு பெரிய ஜமுக்காளத்தை அவர் மேலே .போர்த்தி மூணு மணிக்கு ஒருவரைக் கூப்பிட்டு 'நம்ப ஐயா அவர்களை இந்தத் தலைவர் திறப்பார்' என்று அந்த ஜமுக்காளத்தை எடுக்கச் சொன்னால் என்ன? இது நமக்குச் சிரிப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது அல்லவா?

உருவம் மற்ற இடத்தில்

உயிரோடு இருப்பவரைவிட அவர் படத்திற்கு என்ன அத்தனை மரியாதை? ஒரு மனிதன் தன்னுடைய உருவத்தை. மற்ற இடங்களில் கண்டால், அவன் மகிழ்ச்சி