பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175

இதையே ஒரு இளம் காளையிடம், 'என்னா தம்பி உடம்பு எப்படி. ருக்கு?' என்று கேட்டால், அதற்கு அர்த்தமே வேறு இல்லையா?

சில நேரத்தில் நாம் எவ்வளவோ முயற்சி செய்கிறோம்; விழுந்து விழுந்து பாடுபடுகிறோம். நல்ல படியாக எல்லாம் செய்தாலும்,கூட நமக்கு அந்தக் காரியம் கைகூடுவதில்லை. இதற்காக வருத்தப்படக்கூடாது. ஓகோ... காலம் நமக்கு ஒத்துழைக்கவில்லை என்று புரிந்து கொண்டு கொஞ்சம் பொறுமையாய் இருக்க வேண்டும்.

கேள்விகள் கேட்டால்

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். எல்லோரிடத்திலும் எல்லாவிதமான கேள்விகளும் கேட்டுவிடக் கூடாது.

ஒருவரிடம், "எத்தனை பிள்ளைகள் என்று கேட்கலாம், பதில் சொல்லுவார்.

எத்தனை ஆண்டுகள் வாழலாம் என்று இருக்கிறீர்கள் என்று கேட்கப்படாது.

சிலபேர் யதார்த்தமாகக் கேள்விகள் கேட்டார்கள்.

"யார் யாரோ போய்ட்டாங்களே... நீங்க எப்பப் போகலாம் என்று இருக்கிங்க?'ன்னு யதார்த்தமாகக் கேட்டால் அது . ரொம்ப ஆபத்தான கேள்வியாசுப் போயிடும். அவர் உடனே, ஏன்? நான் இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா?'ன்னு கேட்பார்.

பல பேருக்கு இறந்து போவதென்றால் ஒரே. நடுக்கம். ஏன்? மரணம் திடீர் திடீரென்று வருவதால்தான். எப்போது இறக்கப் போகிறோம் என்று. முன்னமேயே தெரிந்து விட்டால் அவ்வளவு வருத்தம் - இருக்காது. முதலில், கொஞ்சம் பயம் வரும்; போகப் போக்த் தெளிந்துவிடும்.