பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

செயல்படுத்துதல்

அதாவது ஒரு மாம்பழம் சாப்பிட்டால் நல்லது என்று மனம் நினைக்கும். உடனே புத்தி என்பது, உருவம்: சொல்லிப் பக்கத்து வீட்டுத் தோட்டத்திலே, சிவப்பாக உருண்டையாக, ஒரு மாம்பழம் தொங்குகிறது என்பதைச் சொல்லிவிட்டுப் போய்விடும். சித்தம் என்பது எப்படியும் அந்த மாம்பழத்தை சாயங்காலம் பறித்துத் தின்ன வேண்டும் என்று உறுதி செய்யும். அகங்காரம் என்பது செயல்படுத்துவதற்காக மதில் மீது தாவிக் குதித்து, பழத்தைப் பறித்து, அந்த வீட்டுக்காரர் கொடுப்பதையும் வாங்கிக் கொள்ளும். இவைகளை எல்லாம் அறிவு என்பது பார்த்துக்கொண்டு---சம்பந்தம் இல்லாமல் இருக்கும்.

அறிவின் மேலான சிறப்பினைப் பற்பல முறைகளில் இணையற்ற வகையில் ஆசிரியர் வள்ளுவனார் விளக்க மாகத் தெளிவுபடுத்திக் கொண்டு வருகிறார்.

"அறிவுடையார் எல்லாம் உடையார்" ----

என்ற ஒரு கருத்தினைச் சிந்தித்துப் பார்த்தாலே, அறிவின் இன்றியமையாத் தன்மை விளங்கும்.

மனம் மயக்கி விடும்

மனத்தின் தன்மை அறிவினையும் மயக்கித்.. தன்னுடைய வசமாக்கி விடுவதும் உண்டு. மனம் தன்னுடைய போக்கிலேயே அறிவினை இழுத்துக் கொண்டே பொகும். எல்லாவற்றையும் தெரிந்து செயல்படுத்தக் கூடிய அறிவு மனத்தின் வசப்பட்டு விடும். ஆசைகளுக்கெல்லாம்: .. . இருப்பிடமானது மனம். அந்த மனத்தின் காரணத்தினால், அறிவு திகைப்பில் மலைத்து விடுவதும் உண்டு.

மிகப் பெரும் முனிவராகிய தாயுமான சுவாமிகள் தெளிவாகக் கூறுவதைக்' கவனிக்க வேண்டும்.