பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177

அவங்க கேட்டுக்கிட்டிருந்தாங்க. வயசாகி விட்டால் நம்ம உடம்புலே ரத்தம் குறையுது. நாம் சொல்றதை மற்றவங்க கேட்கறதும் குறைகிறது. பிள்ளையோ பேரன் பேத்தியோ இருக்கட்டும்; நம்ம உடம்போட பிறந்ததே நாம் சொல்றதைக் கேட்க மாட்டேன் என்கிறதே!


உறுப்புக்கள்

கண், காது, மூக்கு, பற்கள் இவையெல்லாம் என்ன? இரவலா வாங்கினோம்? இவையெல்லாம் நம் கூடவே . பிறந்தவைதானே. நம் கூடவே பிறந்த கண், காது, நம் சொந்தப் பல் இவையெல்லாம் வயசானா நாம் சொல்றதைக் கேட்கிறதில்லையே. வயசானா கண் பார்வை மங்கி, “இனிமேல் என்னாலே பார்க்க முடியாது. ஏதாவது கண்ணாடியை வாங்கிப் போட்டுக்கப்பா" என்று சொல்லும். காது என்ன செய்யும்? "ரொம்ப நாளா உனக்காக என்னென்னமோ கேட்டுக் கேட்டுச் சொன்னேன். இப்ப முடியலே, இனிமே உனக்கு உதவி செய்ய முடியாது... ஏதாவது ஒரு எந்திரத்தை வாங்கிக் காதில வச்சுக்கோ என்று சொல்லிவிடும்!

நம் கூடப் பிறந்ததே நமக்குக் கடைசி வரைக்கும் உதவவில்லை என்றால், மற்றவர்களெல்லாம் கடைசி வரைக்கும் நமக்குத் துணையாயிருப்பார்கள் என்று நினைப்பது எவ்வளவு அறியாமை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.