பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179

பொழுது அதைக் காதல் என்கிறோம். அந்தக் காதல் தானாகத் தான் உண்டாக வேண்டும்.

ஒரு வாலிபனைப் பார்த்து அவன் நண்பன்; 'ஏனப்பா சும்மாயிருக்கிறாய்...ஏதாவது காதலை ஆரம்பிக்கிறது தானே?' என்று சொல்லிக் கொடுத்தா காதல் வரும்? அவனுக்கே தானாக அந்த எண்ணம் வந்து காதல் ஆரம்பித்து, பிறகு, அதன் பலாபலன்களை அவன் அனுபவிப்பான்! அது வேறு கதை!

உணவும் மனைவியும்

ஒரு சின்ன அனுபவம் சொல்கிறேன். பலருக்குத் தெரிந்தது தான். சாதாரணமாக நாம் சாப்பிடுகிற பொழுது நம்முடைய மனைவி எதிரே நின்று கொண்டிருப்பாள், நாம் பிரியத்தோடு எந்தப் பதார்த்தத்தைச் சாப்பிடுகிறோம் என்பதைப் பார்த்து நம் மனைவி அதையே மேலும் மேலும் வைத்துக் கொண்டிருப்பாள்.

'இரண்டு மணி நேரம் சமையலறையிலே நின்று அடுப்புப் பக்கத்திலே இருந்து இவ்வளவு சமைத்து வைத்தோமே, 'இது நன்றாக இருக்கிறது' என்று எதைப் பற்றியாவது ஒரு வார்த்தை சொல்ல மாட்டாரா? சொன்னால் நம்ம மனசுக்கு எவ்வளவு. மகிழ்ச்சியாயிருக்கும்' என்று நினைக்கிறாள் அவள். அதற்குத்தான் அவள் அப்படி நிற்கிறாள்.

அது தெரியாதவர்கள் நன்றாகச் சாப்பிட்டு விட்டுப் பேசாமல் எழுந்து போனால் அவள் மனது எப்படியிருக்கும்? அதனால்தான் சில பெண்கள், 'இப்படிச் சொல்லத் தெரியலையே அவருக்கு' என்று வருத்தப்பட்டு, 'ஏங்க... ரசம் எப்படி இருக்கு? சாம்பார் எப்படி இருக்கு?' என்று கேட்பார்கள். அதன் பிறகாவது பொறியல் நன்றாயிருந்தது', 'ரசம் : நல்லாயிருந்தது' ன்னு சொல்ல வேண்டும். அதுக்குப் பதிலா, 'மோர் நல்லா இருந்தது'