பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180



என்று சொன்னால் அந்த அம்மாளுக்கு எப்படி இருக்கும், பாவம்!" அது அவள் கை வைக்காதது!

ஒரு சின்ன செய்தி என்று சொன்னாலும் அதில் மனிதனுக்கு மகிழ்கிற, சிரிக்கிற வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அழுதல் சிரித்தல்

நாம் அழுது கொண்டே பிறக்கிறோம். நம்மைச் சுற்றிலுமுள்ள தாய், தகப்பன், மாமன், மாமி, பாட்டன், பாட்டி எல்லாரும் மகிழ்ச்சியால் சிரிக்கிறார்கள். இது சாதாரணமானது தான். மகான்கள் சொன்னார்கள், “ஏ மனிதனே...நீ அழுது கொண்டே பிறக்கிறாய். உன்னைச் சுற்றிலுமிருந்தவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்...அழுது கொண்டு பிறந்த நீ, உலகத்தைவிட்டு மறையும் பொழுது சிரித்துக்கொண்டு மறைய வேண்டும், நீ பிறக்கும் போது சிரித்து மகிழ்ந்தவர்கள் நீ இறக்கும்போது அழ வேண்டும். மனித வாழ்க்கையின் இயற்கை நியதி இது என்று.

மகாத்மா

மகாத்மா காந்தியடிகள் குழந்தையாகப் பிறந்த போது அழுது கொண்டே பிறந்தார். சுற்றிலுமுள்ளவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். ஆனால், இறக்கும் போது மகாத்மா காந்தி சிரித்துக் கொண்டுதான் இறந்தார், ஏன்...? 'என் நாட்டுக்கும், என் மக்களுக்கும், என் சமுதாயத்திற்கும் நான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடித்தேன்...' என்று சிரித்துக் கொண்டே இறந்தார், சுப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் பிறக்கும் போது அழுது இறக்கும்போது சிரித்துக்கொண்டே இறந்தார். “என் மக்களுக்கும் என் நாட்டுக்கும் சுதந்திரத்திற்காகவும் பாடு பட்டேன்.'.., என்று சிரித்துக் கொண்டே இறந்தார்.