பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிரித்து மகிழ வேண்டும்


மனிதப் பிறவியே சிரித்து மகிழ்வதற்குத்தான். சில பேருக்கு சிரிக்கவே தெரியாது. முகத்தை நன்றாக வைத்திருக்கக்கூடத் தெரியாது. அதனால்தான் சிலரைப் பார்த்து, “ஏனப்பா, உன் முகத்தைக் கொஞ்சம் நல்லா வைத்திருக்கக் கூடாதா..? என்று கேட்கிறோம். முகத்தை வாழைப்பூ மாதிரி தொங்கப் போட்டுக்கொண்டு இருக்கக் கூடாது. சூரியகாந்தி மாதிரி மலர்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும்.

சிரிக்கத் தெரியாதவன் கூட, சிரித்தே அறியாதவன் கூட, சுடுடுன்னு முகத்தை வைத்திருக்கிறவன் கூட, , மனைவியென்று வீட்டிற்கு ஒருத்தி வந்து விட்டால், வாரத்திற்கு ஒரு தடவையாவது சிரிப்பான்! அவனை அறியாமலேயே முகம் மலர்ச்சி அடைந்துவிடும்.


கோபம் பொல்லாதது

மனிதனைக் கெடுப்பது கோபம்தானே? கடுமையான கோபம் எத்தனைக் குடும்பத்தை, எத்தனை பேரைப் பாழாக்கியிருக்கிறது? கோபம் பாவங்களுக்கெல்லாம் தாய் தந்தை என்று சொல்கிறார்கள். அந்தக் கோபத்தை எவன் ஒருவன் தணிக்கிறானோ, அவன் வாழ்க்கை முன்னேறும். அந்தக் கோபத்தைத் தணிப்பதற்குரிய சாதனங்களே சிரிப்பும் மகிழ்ச்சியும்.

கோபத்தைத் தணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். "கோபம் வந்துட்டா கோபுர வாசல்லே தலை நுழையாது. குண்டுச்சட்டியில் கை நுழையாது என்று நம்ம கிராமங்களிலே சொல்வார்கள். கோபுர வாசல் எத்தனை பெரிது! அதிலே நுழைந்து போகாமல், ஓரத்தில் போய் தலையை