பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

"ஏ! நெஞ்சமே! மனமே! நாதனாகிய இறைவனைத் தியானித்து ஒன்றுபட்டு இன்பம் அடைவதற்கு “வா' என்று: அழைத்தால் என்னைத் துன்பப்படுத்தி வசம் செய்து கொண்டு துன்மார்க்கமான போதனை செய்வது சரியாகுமா? மேற்கூறிய கருத்துக்கள் நிறைந்த பாடல் ஒன்று கற்போர்கள் எண்ணத்தினை எவ்வளவு அருமை.. யாகக் கவர்ந்து விடுகிறது.

"நாதனை நாதாதீத நண்பனை நடுவாய் நின்ற
நீதனை கலந்து நிற்க நெஞ்சமே நீவா என்றால்
வாதனை பெருக்கி என்னைவசம் செய்து மனம்
துன்மார்க்க
போதனை செய்தல் நன் றோ பூரணான ந்த வாழ்வே.

ஆகையினால் மனத்தினைக் கட்டுப்படுத்தி ஆசைகளினால் அல்லல்படாமல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.


ஐவர் யார்?

ஐந்து பொறிகளும் ஆசைகளைக் கொண்டு சென்று மனத்தினை அழுக்கு படியுமாறு செய்து, நல்லவற்றை.. மனம் சிந்திக்க விடுவதே இல்லை. ஐந்து பொறிகளும் மிகப் பெரிய தீமையினை உண்டாக்குகின்றனவே என்று : அருணகிரிநாதர், துடிதுடித்துப் பாடுகின்றார்.

"ஓரவொட்டார் ஒன்றை உன்ன ஒட்டார் மலரிட்டு
உன்தாள்
சேரவொட்டார் ஐவர்.......,

இவ்வாறு பொறிகளாகிய ஐவரும் தீங்கு புரிகிறார்களே என்று வேதனையோடு குறிப்பிடுகின்றார்.

ஐந்து பொறிகளினால் அடைகின்ற பயன்கள்---சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பதாக ஐந்து வகைகளாகக் கூறப்படும். இந்த ஐந்தின் நுட்பங்களை "தன்மாத்திரைகள் என்று பேரறிஞர்கள் சொல்லுவார்கள், . , . . ,