பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

தெரிந்து தான் அவனை அளந்து பார்த்தல் வேண்டும், 'அதோ போகிறானே... அவன் ஒரு ' 'நரி...' என்று பலர் பேசுவதைக் கேட்கிறோம். அவனுடைய தாயார் நரிக் குட்டியையா பெற்றாள். மனிதக் குழந்தை பெற்றாள், *அவன் நரியாக மாறிவிட்டான்... குணத்தினால்!

நாடும் காடும்

பெரியவர்கள் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு அர்த்தம் உள்ளனவாக இருக்கின்றன என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 'மனிதன் காட்டிலே வாழ்வது சுலபம். நாட்டிலே வாழ்வது கடினம்' என்று ஒரு பெரியவர் சொன்னார். அதனைக் கேட்ட ஒருவர், அந்தப் பெரியவரைப் பார்த்து காட்டிலே சிங்கம், புலி, கரடி, காண்டாமிருகம் முதலிய கொடிய மிருகங்கள் இருக்கின்றனவே அங்கே வாழ்வது எப்படிச் சுலபம் என்கிறீர்கள்?' என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெரியவர், 'அங்கே கொடிய மிருகங் களிருந்தாலும் ஒவ்வொன்றையும் பார்த்து, இது நரி... இது கரடி. இது காண்டாமிருகம்...என்று அடையாளம் தெரிந்து கொண்டு நாம் எப்படியாவது தப்பித்து ஓடி விடலாம். ஆனால், தினம் நாம் பார்க்கும் மனிதர்களிலே யார் நரி, யார் புலி, யார் கரடி என்று தெரியாமல் நாமே சில நேரத்திலே கரடிகளையும், நரிகளையும் வீட்டிற்கு அழைத்துப்போய் பொல்லாத வேதனைக்கு ஆட்பட்டு விட நேர்கிறது' என்கிறார்.

மிருகங்களுக்கு சிரிக்கத் தெரியாது. மனிதன் ஒருவனுக்குத்தான் சிரித்து மகிழத் தெரியும், இப்படிப் பட்ட அருமையான வாய்ப்பினைப் பெற்றிருந்தும் சிரித்து மகிழத் தெரியாதவர்களை நாம் காணுகிறபோது நமக்கு வியப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.