பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

குழந்தைகள்

ஒரு நாள் நண்பருடன் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு உள்ளேயிருந்து 'கலகல' என்று சத்தம் தொடர்ந்து வந்தது. சிறு பிள்ளைகள் எல்லோரும் கும்மாளம் போட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்த சத்தம் வெளியே உட்கார்ந்திருந்த எங்கள் காதுகளில் விழுந்து கொண்டிருந்தது. குழந்தைகள் அப்படி விளையாடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் சத்தம் போட்டுக்கொண்டுமிருந்த நிகழ்ச்சி எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தச் சிரிப்பொலியைக் கேட்டுக் கொண்டிருந்த என் பக்கத்திலே உட்கார்ந்திருந்த நண்பருக்குப் பெருங்கோபம் வந்து வேகமாக உள்ளே போனார். உரத்த குரலில் குழந்தைகளைப் பார்த்து, 'உங்களுக்கு என்ன கேடு வந்தது? ஏண்டா இப்படி ஆட்டம் போடுகிறீர்கள்?' என்று பலமான அடி கொடுக்கவே, அவர்கள் நாலு திசையிலும் ஓடி விட்டார்கள். சத்தம் போட்டுக்கொண்டே வெளியில் வந்தார் அவர். “என்ன சார். பெரியவர்கள் பேசிக் கொண் டிருக்கிறார்களே என்று மரியாதை இல்லாமல்... இது களுக்குப் பயமே இல்லை. இங்கே எதுக்கு இப்படிச் சிரிக்கணும் என்று சிரிப்பதையே பெரும் குற்றமாகச் சொன்னார்.

சிரித்து மகிழ வேண்டும் என்று கருதுகின்ற மக்கள். சமுதாயத்தில், அதை வெறுத்துப் பேசுகின்ற குணத்தையும் : வளர்த்துக் கொண்ட கொடுமைகளையும் நாம் பார்க்கிறோம்.

. . - :