பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தூய மனத்தினில் இடைவிடாமல் இறைவனைத் தியானம் செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.

திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தில் காணப்படும் குறட்பாக்களில் சொல்லப்பட்டுள்ள "சேர்ந்தார்----"புரிந்தார்" என்ற சொற்களுக்கெல்லாம், 'இறைவனையே நினைத்தல்' என்பது பொருள் ஆகும்,

மனத்தில் எண்ணிறந்த ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து குவிந்து கொண்டே இருக்கும். நம்முடைய முயற்சியால் மட்டும் இந்த ஆசைகளை மனத்திலிருந்து விலக்கி விடுதல் என்பது மிகவும் கடினமானதொரு செயலாகும், அந்த ஆசைகள் தாமாகவே, நம்மை விட்டுப்போகுமாறு செய்தல் வேண்டும். இறைவனைச் சிந்தித்தல் என்ற தியானப் பியிற்சியினால் தான் இதனை எய்துதல் முடியும்.


இரும்புத்துண்டு

சிறந்த ஞானிகள் பற்பல உதாரணங்களினால் மிக ஆழ்ந்த கருத்துக்களை எல்லாம் எளிமையாக விளக்கம் செய்வார்கள். நீளமான இரும்புத் துண்டு ஒன்று, தரையில் கிடக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்த இரும்புத்துண்டின்மீது. புழு, பூச்சிகள் எல்லாம் போய் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

ஒருவர் அவைகளை எல்லாம் அந்த இரும்புத் துண்டிலிருந்து கீழே தள்ளிக் கொண்டிருக்கிறார். சிறிது நேரம் கழித்துக் கடுமையான, புழு பூச்சிகள் எல்லாம் மீண்டும் அந்த இரும்புத் துண்டில் ஒட்டிக் கொள்கின்றன. ஆதலால் தள்ளிக் கொண்டிருக்கிற வேலையை விட்டுவிட்டு அந்த இரும்புத் துண்டினை நெருப்பு இருக்கின்ற இடத்தில், கொண்டு போய் நெருப்பினைச் சுடுமாறு சேர்த்து விடுதல் வேண்டும். .