பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அது போன்ற உள்ளத் துடிப்பு இறைவனை அடைய இருத்தல் வேண்டும், இதனை 'முமூட்சுத்துவம்' என்று வழக்கமாகச் சொல்லுவார்கள். முறையாகச் செய்கின்ற தியானப் பயிற்சியினால், இந்த நிலை வந்துவிடுவதாகும். இத்தகைய கருத்துக்களை எல்லாம் ஞான நூல்கள் நமக்குத் தெளிவு படுத்துகின்றன.

கைவல்யம்

கைவல்யம் என்ற நூலைப் பற்றிச் சிறிதளவாவது நாம் அறிந்துகொள்ளவேண்டும். இதனை கைவல்ய நவநீதம் என்று அழைப்பார்கள், வெண்ணெய்" என்பது இதன் பொருளாகும். அதாவது பாலினைக் காய்ச்சிக் கடைந்து எடுப்பதால் உண்டாவதாகும்.

வேதாந்தம் என்கிற பாற்கடலில் இருந்து, நூல்கள் என்கிற குடங்களில் மொண்டு முன்னோர்கள் நிறைத்து வைத்தார்கள் என்றும், அதனைக் கடைந்து எடுத்த வெண்ணெய் தான் 'கைவல்யம்' என்று பெரியவர்கள் - சொல்வார்கள். பாடல் பேசுகிறது:---

படர்ந்த வேதாந்தம் என்னும்
பாற்கடல் மொண்டு முந்நூற்
குடங்களில் நிறைத்து வைத்தார்
குரவர்கள் எல்லாம்...............-.
காய்ச்சி கடைந்தெடுத்து அளித்தேன்
இந்த கைவல்ய நவநீதத்தை ............

ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும் என்றெல்லாம் பேசப்படுகின்ற அனுபூதிமான்கள் கூறுகின்ற நுட்பமான மறைபொருள்களை எல்லாம் 'கைவல்ய நவநீதம்' என்ற நூலில் தெளிவாகக் காணமுடிகிறது.