பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

மறைமொழிகள்

ஞானிகள் எனப்படுகின்ற முனிவர்கள் ஓதிய கருத்துக்களை எல்லாம் 'மறைமொழிகள்' என்றும் 'வேத வாக்குகள்' என்றும் சொல்லிக் கொள்கிறோம். *கைவல்ய நவநீதம்' என்ற அரிய நூலில் சுருக்கமாக ஒன்று சொல்லப்படுகின்றது.

சாதனமின்றி ஒன்றைச்
சாதிப்பார் உலகிலில்லை
ஆதலால் இந்த நான்கும்
அறிந்தவர்க்கு அறிவுண்டாகும்
நூதன விவேகியுள்ளே நுழையாது
நுழையுமாகில் பூதஜன்மங்கள் கோடி
புனிதனாம் புருடனாமே.

வாழ்க்கையில் நம்பிக்கை வைக்க வேண்டியவைகளை நம்பி ஆகவேண்டும்; எல்லாவற்றையுமே நம்பமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்துச் செயல்படவேண்டும்.

நூதன விவேகி

சிலர் நல்ல அறிவு படைத்தவர்களாகவே காட்சியளிப்பார்கள். ஆனால் எந்தக் கருத்தையுமே மறுத்தும்---எதிர்த்தும் பேசுகின்ற வழக்கத்தையும் வைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களைத்தான் நூதனவிவேகிகள் என்று கைவல்யம் சொல்கிறது.

விவேகிகளாக இருந்தாலும் இவர்கள் பேசுகின்ற 'பேச்சு எந்த உயர்ந்த தத்துவத்தையும் பின்பற்றாமல் நூதனமாகவே இருப்பதாகும். தியானம் செய்கின்ற இறை நெறி மார்க்கத்தினை ---- சரியை ----- கிரியை---யோகம் -----ஞானம் ---- என்று நான்கு வகைகளாகக் கூறுவார்கள். முறையே 'சாதனம்' செய்கின்ற வழி. நெறியாகும், தியான