பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

தவம்

"தவமும் தவமுடையார்க்கு ஆகும்" (கு.262) என்பது திருவள்ளுவர் வாக்காகும். முன்பு செய்த நல்வினையின் காரணமாகத்தான் இப்பிறவியில் தவத்தினை, மேற்கொள்ள முடியும் என்பது அறிஞர்களின் கருத்து ஆகும்,

ஒருவர் ஒரு பிறவியில் செய்த நல்வினை தீவினைகள் செய்தவனைச் சார்ந்து வந்து கொண்டே இருக்கும் என்பது மெய்யுணர்வினைப் பெற்ற தத்துவ ஞானிகளின் கருத்து ஆகும், இயல்பாகவே வினைப் பயன்கள் தொடர்ந்து வருவதால் அதனை இயற்கையின் நியதி என்றும், . ஊழ்வினை என்றும் சொல்வார்கள். "ஊட்டும்" என்பதற்கு இயல்பாக உண்டாவது என்பது பொருளாகும். உலக வாழ்க்கையில் நம்முடைய முயற்சிகளின் பயனால் நடைபெறுகின்றவற்றை 'செயற்கை' என்றும், இயல்பாகவே நடைபெறுவதை 'இயற்கை' என்றும் கூறிக்கொள்கிறோம்.

உலகில் நிகழ்கின்ற பல நிகழ்ச்சிகள் இயற்கையின் விளைவாக நடைபெறுகின்றன. "இயற்கை விதி" என்றால் இயற்கையின் சட்டம் என்று பொருள். 'விதி' என்ற சொல்லுக்குச் சட்டம் என்பது பொருள் ஆகும்.

ஊழ்வினை

'விதிமுறைகளை அனுசரிக்கவும்' என்று எழுதியிருந்தால் சட்ட முறைப்படி நடக்க வேண்டும் என்பதாகும்.

செயற்கையைவிட இயற்கை முதன்மை பெற்றதாகும், கடல் என்பது இயற்கை. கப்பல் விடுவது செயற்கை. பூமி என்பது இயற்கை, வீடு கட்டுவது செயற்கை.

இயற்கையாகிய பூமியை நாமே படைத்துச் செயல்படுத்துவது ' நம்மால் இயலாத காரியம். இயற்கை