பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

வைத்துப் பால் காய்ச்ச வேண்டுவதும் நம் கடமை இவ்வளவு நாம் செய்து முடித்த பிறகு காய்ச்சப்பட்ட பாலில் சிறிதளவு மோர் ஊற்றுவார்கள். இதனை 'உறை' க்கு ஊற்றுதல் என்று சொல்வார்கள், பால் உறைந்த பிறகு நன்றாக, கடைந்து எடுத்தால் வெண்ணை கிடைக்கும்.

ஒன்றுமே இல்லாமல் கொஞ்சம் உறைக்கு ஊற்றுங்கள் என்று சொல்வது வேடிக்கையாக முடியும். எங்கே 'உறைக்கு' ஊற்றுவது என்று கேட்பார்கள்.

உபதேசம்

உறை ஊற்றுகின்ற மோரானது முன்னதாகவே காய்ச்சிய பாலில் கடைந்தெடுக்கப்பட்டதால் வந்தது என்பதைக் குறிப்பாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

இவ்வாறாக கருத்தினைக் கொண்டு தான் குருமார்கள் 'உபதேசம்' செய்வதனையும், உறை ஊற்றுதல் போன்றது என்று அறிஞர் கூறுவார்கள். உறை ஊறிய பிறகு உறைந்திருக்கும் பாலினை மிகக் கடினமாகக் கடைந்து எடுத்தால்தான் வெண்ணை கிடைக்கும், என்பது போல, குருமார்களிடம் உபதேசம் பெற்ற பிறகு முறையான தியானப் பயிற்சியில் இருந்து வந்தால் தான் நற்பயன்களை அடைய முடியும். துன்பங்கள் எனப்படுகின்ற இடையூறுகள் எல்லாம் இறையருள் வழியில் செல்லுகின்ற தியானப் பயிற்சினால் மறைந்து ஓடிவிடுவன ஆகும். வினைப் பயன்கள் என்பவைகள் இறைவனால் கொடுக்கப்பட்டவை அல்ல. இவைகள் எல்லாம் பிறவியில் செய்யப்படுகின்ற' செயல்களால் வருவன ஆகும்.

ஆன்மீகத் துறையில் தியான முறையில் இருப்பவர்களை குருமார்கள் தாமாகவே தேடி வந்தும் நல்வழி '-