உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

புகட்டி, உபதேசம் செய்வார்கள் என்பது மெய்ந் நூல்களில் கூறப்பட்டிருப்பன ஆகும். இறைவனையும் குருமார்களையும் வேறு வேறாகப் பிரித்து சிந்திக்கக் கூடாது. அறநெறியில் நிற்கின்ற முனிவர்கள் இறைத் தன்மை 'பெற்றவர்கள் ஆவார்கள். நிறைந்து மிகுந்த ஆற்றல் பெற்றவர்களே குருமார்கள் எனப்படுவார்கள்.

அவித்தான்

ஆசிரியர் திருவள்ளுவனார் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் இறைவனுக்கு விளக்கம் தருகின்ற போது "ஐந்து அவித்தான்" என்று குறிப்பிடுகின்றார். அது போலவே . முனிவர்களைப் பற்றிப் பேசுகின்ற 'நீத்தார் . பெருமை' என்ற அதிகாரத்திலும், 'ஐந்து அவித்தான்' என்ற பெயரிலேயே முனிவர்களைக் குறிக்கின்றார் என்ற கருத்து சிந்திக்கத் தக்கதாம்.

குருமார்கள் உபதேசம் செய்கின்ற முறைகளை மூன்று வகைகளாக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். உள்ளத்தில் நினைத்து உபதேசம் செய்வது, கண்களைப் பார்த்து உபதேசம் செய்வது, உடம்பினைத் தொட்டு உபதேசம் செய்வது, என்பதாக மூன்று முறையில் அமைந்துள்ளன. இதனை வடமொழியில் சட்சு தீட்சை-- நயன தீட்சை--பரிச தீட்சை என்று கூறப்படுவதாக குறிப்பிட்டுக் காட்டுகின்றார்கள்.

குரு உபதேசம் என்பது என்னவென்றால் ஒரு முனிவர் பல பிறவிகளில் தான் தேடி வைத்துள்ள ஞான சக்தியின் பயனை சீடனுக்கு கொடுக்கின்றார் என்பது பொருள் ஆகும். ஆதலால் தான் உபதேசம் என்ற பொருளினை எல்லோருக்கும் கொடுத்து விட மாட்டார்கள். பக்குவமும் தகுதியும் நிறைந்தவர்களுக்கே உபதேசம் செய்வார்கள்.