32
“ஊழிற் பெருவலி யாவுள
(கு. 380)
என்ற கருத்துரையும் சிந்தித்துப் பார்க்கத் தக்கதாம். இயற்கையின் வலிமை செயற்கை என்ற முயற்சியினை விட மிகப் பெரியதாகும்.
செயற்கை என்கிற முயற்சியினால் பல நல்ல பயன்களை அடைய முடியும்.
"ஊழையும் உப்பக்கம் காண்பர்
(கு. 620)
என்ற கருத்துரையும் பல சூழ்நிலைகளில் முயற்சி என்பது இயற்கை எனப்படுகின்ற ஊழ்வினையினையும் வெற்றி காண முடியும் என்கிறது. வாழ்க்கையில் உலக நடைமுறையில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை இயற்கை -- 'செயற்கை என்று பிரித்துப் பேசுகின்றோம். உதாரணமாக இயற்கையில் 'பேய்மழை' பெய்து கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோமே. அப்பொழுது நாம் முயற்சி செய்தாலும், வெளியில் செல்ல முடியவில்லை. அதற்குக் . காரணம் செயற்கையாகிய முயற்சியினைவிட. இயற்கை நிகழ்ச்சி வலிமையுள்ளதாக திகழ்கிறது.
முயற்சியின் வெற்றி
ஒரு நேரத்தில் மழை சிறிய தூறலாக பெய்து கொண் :டிருக்கிறது. இதுவும் இயற்கையின் நிகழ்ச்சி தான். அப்பொழுது, குடை பிடித்துக்கொண்டு நம்முடைய முயற்சியினால் வெளியில் செல்ல முடிகின்றது. இயற்கையினால் இந்த இடத்தில் செயற்கை என்ற முயற்சியைத் தடுத்து நிறுத்த இயலாமற் போய்விடுகிறது. முயற்சி பலன் அளித்தது.
ஒரு ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகின்ற போது, நம்மால் கடந்து செல்ல முடியவில்லை. நம்முடைய முயற்சி பயன் அளிக்காது. அதே ஆற்றில் ஒரு நேரத்தில்