பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

இரண்டடி தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம்; அப்பொழுது நம்முடைய முயற்சியினால் நடந்து ஆற்றைக் கடந்து செல்கிறோம்.

இயற்கையின் நிகழ்ச்சி வேகம் குறைந்திருக்கிறபோது, முயற்சி வெற்றி பெறுகிறது. இவ்வாறு இயற்கையின் ' நிகழ்ச்சிகளை காலங்களின் சூழ்நிலைகளினால் சிந்தித்து அறிதல் வேண்டும்.

மேலே சொன்ன உதாரணங்களை மனதில் கொண்டால் "ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்ற கருத்துரையும், "ஊழிற் பெருவலி யாவுள என்ற கருத்துரையும், தெளிவாகப் புலப்படுவன ஆகும்.

விளக்கம்

உலகியல் வாழ்க்கையில் கற்றும் கேட்டும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள், எண்ணிறந்தவையாக இருக்கின்றன என்பது உண்மையிலும் உண்மையாகும். ‘ஐந்தவித்தான்' என்று நாம் படித்த சொற்களின் நுட்பத்தினை ஆராய்ந்து பார்க்கின்ற போது புதுமையான பல உண்மைகள் புலப்படுவதாகும். அவித்தான் என்ற சொல்லுக்கு அருமையான பொருள் அடங்கியிருப்பதைக் காணுகின்றோம். ஐந்து பொறிகளையும் (மெய்--வாய்--கண்--மூக்கு--செவி) அவித்தல் வேண்டும் என்றால், அவைகளைக் கெடுத்துவிடுதல் என்பது பொருள் ஆகாது. அவைகளைக் கெடுத்துவிட்டால், அவதிப்பட்டு உலகில் வாழ்க்கை நடத்தவே முடியாது.

அவித்தல் என்ற சொல்லினைப் பழக்கத்தில், நாம் கேட்டு வருகின்றோம். 'நெல் அவித்தல்' என்று சொல்வார்கள், அதாவது அரிசியாக அறைப்பதற்கு நெல்லைப் பக்குவப்படுத்த வேண்டும், ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் விட்டு நெல்லையும் போட்டு அடுப்பின் மேல் வைத்து அவிக்கின்றோம், நெல்லை குழைய குழைய ' '