பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

உணர்த்திய உண்மைகளை எல்லாம் அருமையாகப் - பாடுகின்றார், 'குரு வடிவமாக இறைவன் வந்து உபதேசம் செய்வார்' என்பதற்கு 'திருவருட்பா' ஒன்றினைக் கண்டு தெளிவோமாக.


அந்தோ ஈது அதிசயம் ஈது அதியம் என் புகல்வேன்
அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
இந்தோங்கு சடைமுடிநின் அடிமுடியுங்காட்டி
இது காட்டி அது காட்டி எந்நிலையும் காட்டி
சந்தோட சித்தர்கள் தம் தனிச் சூதும் காட்டி
சாகாத நிலைகாட்டி சகஜ நிலை காட்டி.......

பல நால்களை ஓதாமல் உணர்ந்த -- உலகில் சிறந்த மகான் வடலூர் வள்ளலார், திருக்குறட்பாக்களை அருமையாக குறித்துக் காட்டி நமக்கு அறிவுறுத்துகின்றார்.

திருவருட்பாவில் *நெஞ்சறிவுறுத்தல்' என்ற ஒரு பகுதி 'சொல்லப்படுகிறது. அப்பகுதியில் குறட்பாக்களை எல்லாம் வள்ளலார் எடுத்துச் சொல்லி, “'நெஞ்சமே குறட் பாக்களை எல்லாம் மறந்து விடலாமா என்று நெஞ்சு உருகப் பாடுகின்றார். ஒரு சின்ன எடுத்துக் காட்டினைப் -பார்ப்போம்.

"உறங்குவது போலும் என்ற ஒண் குறளின் வாய்மை
மறங்கருதி அந்தோ மறந்தாய்-கரந்தும்
நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
மருவும் குறட்பா மறந்தாய்....

இவ்வாறு குறட்பாக்களின் சிறப்பினை அருட்பாக்களைக் கொண்டு உயர்நீதி விளக்கம் செய்து அறிவுறுத்துகின்ற தன்மையினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,