பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

போவது போல், தூக்கம் வந்தவுடன் உறங்கியே ஆகவேண்டும். ஆதலால்தான் குறிப்பாக,

"உறங்குவது போலும் சாக்காடு" 339-என்று சொல்லி வைத்தார்.

உலகத்தில் எத்தனை நாள் வாழ முடியும் என்ற கருத்தினை அறுதியிட்டு உறுதியாக எவராலும் சொல்ல முடியாது. ஒருவரைப் பார்த்து எல்லா வகையான கேள்விகளையும் கேட்கலாம். அவர் அமைதியாக எல்லாவற்றுக்கும் பதில் சொல்வார்.

தங்களுக்கு எத்தனை குழந்தைகள்? தங்கள் வீடு எங்கே இருக்கிறது? எப்போது ஊரிலிருந்து வந்தீர்கள்? இத்தகைய வினாக்களை எல்லாம் கேட்கலாம். அந்த நண்பனையே பார்த்து, நீங்கள் எத்தனை நாள் இருக்கலாம் என்று இருக்கிறீர்கள்? என்று கேட்டால், அவர் மிகவும் வருத்தப்படுவார். நான் வாழ்ந்து கொண்டிருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? என்று கேட்பார். நாம் வஞ்சனை இல்லாமல் கேட்கலாம். இக்கருத்தினையுடைய உண்மை என்னவென்றால் ஒவ்வொருவரும் இவ்வுலகில் பல்லாண்டு வாழ நினைக்கிறார்கள் என்பதும், வாழும் நாட்களைக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது என்பதும் ஆகும்.

நன்மைகள்

சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் சொன்னார். “ஆண்டவன் நமக்கு ஆயிரம் நன்மைகள் செய்து கொண்டிருக்கின்றார். அந்த இறைவனுக்கு நாம் எப்பொழுதும் நன்றி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்."

இவ்வாறு சொன்னதைக் கேட்ட ஒருவர், "ஆண்டவன் ஆயிரம் நன்மைகள் செய்திருக்கிறார்" என்று சொன்னீர்-

சி. க.-3