பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

 களே, “அவைகளில் ஒரு நன்மையினைச் சொல்லுங்கள்" என்று கேட்டார்.

சொற்பொழிவாளர் சொன்னார், “இவ்வுலகில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் எந்நாளில் (தேதியில்). மறைவார் (இறந்து விடுவார்) என்று தெரியுமாறு. செய்திருக்கலாம். ஆனால், ஆண்டவன், அவ்வாறு தெரியாமல் செய்ததே பெரிய நன்மையாகும்."

"தேதி தெரியாமல் செய்தது எவ்வாறு பெரிய நன்மையாகும்?”

சொற்பொழிவாளர் சொன்னார், “*தேதி தெரிந்திருந்தால் யாரும் கடன் கொடுக்கமாட்டார்கள். நீங்கள் தான் இருபதாம் தேதி போகிறவர் ஆயிற்றே? எப்படித் திருப்பிக் கொடுப்பீர்கள் என்று கேட்பார்கள். கடனாகக். கொடுக்கிற கடைக்காரருக்குத் தெரியாவிட்டாலும், பக்கத்து வீட்டுக்காரர் போய், “அவர் பத்தாம் தேதி போகிறவர். கடன் கொடுக்காதீர்கள் என்று சொல்லி விட்டு வந்தாலும் வருவார், நம்முடைய பிள்ளைகள் எல்லாம் கடன் வாங்கித்தான் காலம் கழிக்கிறார்கள் என்று கடவுளுக்குத் தெரியும்!

இந்த நகைச்சுவையான பகுதியில் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பகுதி ஒன்று உண்டு.

இரண்டு செய்திகள்

செய்ய வேண்டிய செய்ல்களை அவ்வப்பொழுது செய்து முடித்துவிட வேண்டும், பிறகு பார்த்துக். கொள்ளலாம்' என்று சொல்லுற பழக்கம் மிகவும் கொடுமையான பழக்கம் ஆகும். நம்முடைய நாவினால் இரண்டு வகையான கருத்துக்களை அடிக்கடி சொல்லக்கூடாது, என்று பெரியவர்கள் சொல்வார்கள்.