பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

இந்தக் குறிப்பு எந்த உண்மையினை உணர்த்தி நிற்கின்றது என்பதை உய்த்து அறிதல் வேண்டும். செய்ய வேண்டிய செயல்கள் எல்லாம் அந்தந்த நேரத்திலேயே செய்தல் வேண்டும் என்பதே மிக உயர்ந்த உண்மையாகும்.

காலத்தின் சிறப்பு

காலம் என்பது மிகப் பெரிய சாதனைகளைச் செய்து முடிக்க வல்லது. ஆகும். காலம் போய்விட்டால் அநேக நன்மைகளை அடைய முடியாமல் போய்விடும். காலத்தின் அருமையினைப் பற்றி எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். பருவத்தே பயிர் செய்' என்பதெல்லாம் பொன்னான அறிவுரைகளாகும்.

நடைமுறைப் பழக்கத்தில் மிகச் சிறிய கருத்துக்களைச் சிந்தித்துப் பார்க்கின்ற போதும் காலத்தினைக் கருதித்தான் மிக எளிமையான வினாக்களையும் கேட்டு வைக்கிறோம்.

காலையில் ஒரு நண்பரைச் சந்தித்தால், 'சிற்றுண்டி, சாப்பிட்டீர்களா?' என்று கேட்கிறோம். இந்தக் கேள்வியே காலத்தின் குறிப்பினைத்தான் உணர்த்தி நிற்கின்றது. மதிய நேரத்தில் ஒருவரைச் சந்தித்தால், 'உணவு முடிந்ததா?' என்று கேட்கிறோம், மாலையில் "நம் வீட்டிற்கு நெருங்கிய நண்பர்கள் வந்தால் 'சிற்றுண்டி, சாப்பிடுங்கள் என்று சொல்கிறோம். இப்படிப் பட்டவைகள் எல்லாம் எளிமையான செய்திகள் என்றாலும் காலத்தின் இன்றியமையாத தன்மையினை நமக்கு உணர்த்துவன ஆகும்.

நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி, 'காப்பி சாப்பிடுகிறீர்களா?' என்று யாராவது. கேட்பார்களா?