பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அறிவின் துணை

மனிதனுக்கு இருக்கும் அறிவின் சிறப்பினைப் பலவகைகளில் சொல்லி வருகின்ற ஆசிரியர் திருவள்ளு.வனார்; :குறிப்பாக ஒன்றினைச் சொல்லுகின்ற பொழுது 'நன்றின்பால் உய்ப்பது அறிவு" (422) என்று கூறி வைத்தார்.

அறிவின் துணைகொண்டு மனத்தினை தீய எண்ணங்கள் என்கின்ற அழுக்குகள் சேராமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். மனம் தூய்மையாக இருந்தால் தான் இறைவனைச் சிந்திக்க முடியும். “மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய்” என்று மகாவித்துவானாகவும் மகா நீதிபதியாகவும் இருந்த மாயவரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் பாடினார்.

மூவர்

மகாவித்துவான் வேதநாயகம் பிள்ளை அவர்களும், வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகளும், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களும், சமமான காலத்தவர்கள் என்று. சொல்லப்படுகின்றது: இராமலிங்க அடிகளார் தாம் பாடிய பாடல்களில் "கொளத்தூர் வேதநாயகம் என்று பாராட்டிப் பாடி இருக்கின்றார். "இறைவன் நாமத்தை வாழ்த்துவாய் என்று பாடியவர் மகாவித்துவான் வேதநாயகம் பிள்ளை அவர்கள்.

மனம் தூய்மையாக இருந்தால்தான், அமைதியாகவும் இன்பமாகவும்; துன்பம் இன்றியும் வாழ்க்கை நடத்த முடியும். உலகப் பொதுமறையாகிய. திருக்குறளினை அருளித் தந்த திருவள்ளுவர் முதல் அதிகாரத்திலேயே கடவுளைப்பற்றி விளக்கங்கள் சொல்லுகின்ற பொழுது "மனக்கவலை" என்று குறிப்பிட்டு இருக்கின்றார். கவலை: தோன்றுகின்ற இடம் மனமே தான் என்பது