பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

இதனால் தெளிவுபடுத்தப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் மனமே தான் காரணமாக இருகின்றபடியால் நல்ல செய்திகளையும் கெட்ட செய்திகளையும் பேசுகின்ற பொழுது அனைவரும் மனத்தினையே குறிப்பிட்டுப் பேசுவதை கேட்டு வருகின்றோம்.

மனமே அனைத்தும்

ஏதேனும் ஒரு நல்ல காரியத்தைச் செய்யும் பொருட்டு செல்வாக்கு படைத்த ஒருவரிடம் பலர் சென்று பேசுகின்ற பொழுது, “நீங்கள், கொஞ்சம் மனசு வைக்கணும்... நீங்கள் கொஞ்சம் மனசு வைக்கணும் என்று சொல்வதை. தாம் கேட்டிருக்கின்றோம். அந்தப் பெரிய மனிதரும் மனசு வைக்கணும்" என்று சொல்பவர்களைப் பார்த்து: உள்ளுக்குள்ளாகவே "இருந்தால் தானே வைப்பேன்" என்று நினைத்துக் கொண்டு வந்தவர்களைப் பார்த்து "ஒன்றும் செய்வதற்கு இல்லை; போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்புகின்றார்.

"உன் மனம் என்ன கல்லா?" என்று இப்பொழுதுகூட பேசுவதைக் கேட்கின்றோம். வடலூர் வள்ளலார் மனதினைப் பற்றிப் பேசுகின்ற பொழுதும். "மனம் கருங்கல் பாறை" என்று பாடியிருக்கிறார். அந்த உயர்ந்த உண்மையான கருத்து மக்களிடையே இன்றைய தினமும் பேசப்படுவதைக் காண்கின்றோம். மனத்தினை **பதுங்கிப் பாய்கின்ற புலி என்று மகான்கள் சொல்லுவார்கள்.

எவ்வளவோ ஆற்றலுடன் கட்டிப் பிடித்து வைத்திருந்தாலும் இந்த மனம் நம்மை அறியாமலேயே ஆசைகளைத் தாலிப் பிடித்துக் குதித்து ஓடி வரும், இதனால்தான் மனத்தினை "பேய்க் குரங்கு என்று சொல்லி வைத்தார்கள். எப்பொழுதும் மனத்தினைத் தூய்மையாக வைத்திருப்பவர்களுக்குத் துன்பம், கவலை, மயக்கம் என்பன போன்றவை வரமாட்டாது. '*மனத்தானாம்