பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

குறட்பா

"அகரமுதல எழுத்தெல்லாம் என்று திருவள்ளுவப் பெருமான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லி வைத்தார். இன்றுவரை அவைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆதலால் ஞானிகளின் சொற்கள் எப்போதும் நிலைத்து நிற்கும். அவைகளையே மறைமொழிகள் என்று சொல்கிறோம். "நமச்சிவாய வாழ்க! நாதன் தாள்வாழ்க என்று மாணிக்கவாசகப் பெருமான் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார். இன்றைய தினமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நக்கீரர் பெருமான் "திருமுருகாற்றுப்படை" என்ற நூலில் "உ.லகம் உவப்ப வல நேர்பு திரிதரு" என்று சொன்னார். இதனைச் சொல்லி 1800 ஆண்டுகள் ஆகின்றன என்று படிக்கிறோம். இன்றைய தினமும் சொல்லிக் கொண்டிருக்கிறோமே! மகான்களின் சொற்கள் மறைமொழிகள் ஆனபடியால் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது மாத்திரம் அல்ல---நாவினால் சொல்லுபவர்களை நல்வழிப்படுத்தும் என்பதாகும்.

"நாமார்க்கும் குடியல்லோம்", "அரியானை அந்தணர் தம் சிந்தையானை, மனத்தகத்தான்," “தலைமேலான், வாக்கின் உள்னான்" என்பன போன்ற பொன்மொழிகள் எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு மேலாகவே நிலைத்து நிற்கின்றன. தவம் செய்த முனிவர்களின் அருள் மொழிகள் ஆனபடியால் என்றென்றும் நிலைத்து நிற்கின்றன.

நிலைத்து நிற்காது

.

நாம். சொல்லுகின்ற சொற்கள் அப்படியெல்லாம் ஆண்டுக் கணக்கில் நிற்குமா? உடனே அல்லவா மறந்து மறைந்து போகின்றன. ஒரு நண்பன் மற்றொரு நண்பனிடம் ஒரு மணி நேரமாக என்னென்னமோ சொல்லிக்.