பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

'மறந்து விட்டேன்' என்று சொல்லுவதும், மிகக் கொடுமையான பழக்கமாகும். அதுவே போல 'ஒத்திப் போடுதல்' என்பதும் மிகக் கடுமையான பழக்கமாகும், "பிறகு பார்த்துக் கொள்ளலாம் இப்பொழுது என்ன அவசரம்?" என்று சொல்லிக் கொண்டு அவ்வப்பொழுது செய்ய வேண்டிய செயல்களைத் தள்ளிப் போட்டுக் கொண்டு போகின்ற பழக்கம் மிகவும் தீமையானதாகும், நல்ல அறிவுள்ளவர்கள், அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டிய செயல்களைச் செய்து முடிப்பார்கள்.

இருக்கும் இடம்

எல்லாம் வல்ல இறைவன் மனத்தினையே வீடாகக் கொண்டு இருப்பவன் என்ற உயர்ந்த கருத்தினை, "மனத்து அகத்தான் என்று மகான்கள் சொல்லிச் சென்றார்கள். "மனத்தில் இருக்கின்ற இறைவனை எங்கே போய் வெளியில் தேடுகிறார்?' என்று சித்தர்கள் முழக்கம் இட்டார்கள். எவ்வளவுக்கெவ்வளவு தூய்மையாக மனத்தினை வைத்துக் கொண்டிருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதனால் இறைவன் காட்சியினைக் காண முடியும்.

"நெஞ்சமே கோயில்
நினைவே சுகந்தம், அன்பே
மஞ்ச நீர் பூசை
கொள்ள வாராய் பராபரமே!'".

மனமாகிய நெஞ்சினில் அன்பு நிறைந்திருந்தால் அதுவே இறை வழிபாடாகும்.

ஊரில் உள்ள பெரிய மனிதர் ---- பிரமுகர் ஒருவர் மாலை நேரத்தில் நம் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார். அந்தப் பெரியவர் நம் வீட்டிற்கு வருவதே பெரிய பாக்கியம் .என்று நண்பர் கருதினார். அப்படிப்பட்ட பெரிய மனிதர்