பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

எங்கேயோ தெரிகின்ற விளக்கு வெளிச்சத்தில் எல்லாம் தேடுவானேயானால், எவ்வளவு அறியாமையாகும்? அதுவே போல இறைவனைக் கண்டு களிப்பதற்கு உள்ளம் எனப்படுகின்ற மனத்தில் அல்லவா தேட வேண்டும்: அருமையான இக்கருத்தினை சித்தர் பாடல்களில் காண்கின்றோம்.

உள்ளத்தில் உள்ளான் அடி --- அது நீ
உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாய் எனில் ---
கோயில் உள்ளேயும் காண்பாய் அடி.

மனத்தினால் அல்லவர் இறைவனை வழிபாடு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். தாயுமான சுவாமிகள் சுருக்கமாக ஓரிடத்தில் சொல்லுகிறார்---

உள்ளத்தின் உள்ளே ஒளித்து என்னை
ஆட்டுகின்ற கள்ளக்
கருணையை யான் காணும் திறமாமோ.


அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர் இறைவன் இருக்கும் இடத்தினை எளிமையாகச் சொல்லுகிறார்.


நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பர் அவர் தமை நாணியே.


இந்த அருமையான பாடலில் எளிமையான கருத்தின் ஆழத்தினைத் தெளிவாகக் கொண்டால் பல உயர்ந்த நூல்களின் தத்துவங்கள் எல்லாம் நமக்குப் புலப்பட்டதாகி விடும்.

மனிதப் பிறவிக்கென்றே அளிக்கப்பட்டுள்ள நெஞ்சத்தில் எப்பொழுதும் அன்பு சுரந்து கொண்டே இருக்க வேண்டும். எந்தவிதமான பேதா பேதங்களும் வேறுபாடுகளும்