பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

இல்லாமல் இருக்கின்றதோ, அந்த நெஞ்சங்களில் அன்பு தவழ்ந்து கொண்டிருக்கும்.

இறைவன் அந்த நெஞ்சங்களில் உறைகின்றான் என்று உணர்தல் வேண்டும். மேற் கூறிய பாடலில் நெக்குருகி நினைப்பவர் நெஞ்சத்தில் இறைவன் தானே சென்று, காட்சியளிக்கின்றான் என்று விளக்கம் சொன்னார்.

தூய்மையே வேண்டும்

நெஞ்சத்தினைத் துாய்மையாக வைத்துக் கொள்ளாமல், கொடிய தீமையான குணங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு கையில் பூவும் நீரும் எடுத்துக்கொண்டு இறைவனிடம் செல்பவர்களைப் பார்த்து இறைவன் நகைக்கின்றார் என்று, இந்தப் பாடல் நயமாக மொழிகின்றது.

வடலூர் வள்ளற் பெருமான், இறைவனுடைய கருணை நிறைந்த அளவிலாச் சிறப்பினைக் கூறிக்கொண்டு. வருகிறபோது ஒரு பாடலில்,

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே கிறைந்து கிறைந்து ஊற்றெழுங் கண்ணீர்
அதனால்
உடம்பு நனைந்து நனைந்து.....

என்ற அருட்பாவின் உயர்ந்த கருத்தினை அறிந்து கொள்ளுதல் வேண்டும். மனம் துாய்மையே மந்திரம் என்ற உயர்ந்த நெறியினைக் கடவுள் வழிபாடு’ என்று உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

மகான் வேதநாயகம் பிள்ளை மனத்தினைக் குறித்துக் காட்டிப் பேசுகிறபொழுது,

"ஏ மனமே! (அகமே) நீ இறைவனைத் துதிக்காமல் இருக்கலாமா?" என்று அருமையாகக் கேட்டிருக்கின்றார்.