பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

'தொரு காரியத்தினை நல்லபடியாக முடிக்கவேண்டும் என்று விளக்கமாகச் சொல்லி வைத்திருந்தார். அந்தக் காரியம் முடிந்த பிறகு அந்தப் பெரியவர், சொன்ன மாதிரி எளிதில் முடிக்கப் படவில்லை என்று கண்டார். உடனே அந்த வாலிபரைப் பார்த்து, “ஏனப்பா! ஒரு தடவைக்குப் பத்து தடவை சொன்னேன், சொல்லியும் இப்படித் தவறாகச் செய்யலாமா?" என்று கேட்கிறார், இவ்வாறு பேசப்படுவதைப் பல இடங்களில் பலமுறை கேட்டு வருகின்றோம். இந்தப் பழக்கம், பேச்சின் மூலத்தினைக் கண்டறிய சிந்தனையைத் தூண்டுவதாகும்.

திருவள்ளுவர் ஒரு கருத்தினைச் சொல்லுவதற்கு ஒரு அதிகாரத்தில் 10 குறட்பாக்கள் அமைத்துள்ளார்கள். 10 முறைகளில் ஒரு கருத்தினை விளக்கிக் கூறுவதால் மக்கள் உள்ளத்தில் ஆழப் பதிந்து நிற்கும் என்பது திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கையாக இருந்திருக்க வேண்டும், மிகப் பழங்காலந் தொட்டு சமுதாயத்தில் வழங்கி வருகின்ற பழமொழிகள் நம்முடைய வாழ்க்கையினைச் செப்பனிடு பவைகளாகும். அந்தக் கருத்தினைப் பின்பற்றி நாம் வாழ்ந்து பழக வேண்டும்.

கோபம்

குறிப்பாக, சிற்றூர்களில் அதிகமாகக் கேட்கப்படுகின்ற பழமொழி வாசகம் ஒன்று உண்டு. "கோபத்தில் கோபுர வாசலில் தலை நுழையாது, குண்டு சட்டியில் கை நுழையாது" என்பதாகும். இந்த முது மொழியினை நன்கு புரிந்துகொண்டு வாழ சுற்றுக்கொள்ள வேண்டும், ஒருவனை மிகுந்த துன்பத்தில் தள்ளிவிடுவது அளவுக்கு மீறிய கோபமே ஆகும். கோபம் வந்துவிட்டால், ஒருவனுடைய அறிவு மங்கிப் போகும். இன்னதுதான் செய்கின்றோம் என்று தெரியாது. நல்லது கெட்டது என்பதைப் பகுத்துப் பார்க்கின்ற சிந்தனை மறைந்து போகும்.