உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

"கோபமே பாவங்களுக்கெல்லாம் தாய்---தந்தை என்று சொல்லி வைத்தார்கள். கொடுமையான பாவத்தினைப் பெற்று எடுக்கின்ற தாய்-தகப்பனுக்கு 'கோபம்' என்று பெயர். ஆதலால் தான் கோபம் வந்தவனுக்கு ஒன்றுமே தெரியாது என்பதைச் சுட்டிக் காட்ட 'கோபுர வாசலில் தலை நுழையாது' என்று சொன்னார்கள். கோபுர வாயில் என்பது எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் கூட்டம் கூட்டமாகப் போகின்ற வழியாகும். பெரிய வாகனங்கள் செல்லுகின்ற தளமாகும். கோபம் வந்தவனுக்கு அந்தப் பெரிய வழியே தெரியாமல், ஓரத்தில் சென்று சுவற்றில் முட்டிக் கொள்ளுவான் என்று சொல்லப்பட்டது:

அதுவே போல குண்டுசட்டி என்பது மிகவும் அகலமான வாயினைக் கொண்டதாகும். மிக எளிமையாக ஒரு பொருளை வைப்பதற்கும் எடுப்பதற்கும் முடியும், அப்படி இருக்க கோபம் வந்தவனுக்குக் கண் தெரியாததினால் தன் கையினை முன் பாகத்தில் செலுத்தாமல் அடிப்புறத்தில் கொண்டு போய் விட்டுவிடுவான் என்று சொன்னார்கள்.

ஆதலால், மிகக் கொடுமையான கோபத்தினை -குறித்துக் காட்டுகின்ற பழமொழி பலருக்குக் கண் திறந்து விடுவதாக அமைந்திருக்கிறது. சினம் வாராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எல்லோருடைய நற்குணமாக அமைந்திருத்தல் வேண்டும்.

பிச்சைக்காரன்

வறுமையினால் உண்ண உணவின்றி, இரந்து வயிறு பிழைப்பவனைப் பார்த்து ஆசிரியர் வள்ளுவனார் மிக அருமையான நீதியினை சொல்லிக் காட்டுகிறார். வழக்கத்தில் இரந்து வாழ்க்கை நடத்துபவர்களை 'பிச்சை எடுப்பவர்கள்' என்று சொல்லுகிறோம். பிச்சை எடுப்பவர்களுக்குக் கடுகளவேனும் எக்காலத்திலும் 'கோபம்'என்பதே