பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

திருவோடு

ஒரு வீட்டின் திண்ணையில் ஒரு பெரிய மனிதர் உட்கார்ந்து இருந்தார். அது ஒரு செல்வந்தர் வீடு. அப்பொழுது தெருவில் ஒருவன் பிச்சை எடுத்துக்கொண்டு போனான். இந்தப் பெரிய மனிதர் உட்கார்ந்து இருந்த வீட்டிற்கும் வந்தான். அவன் கையில் 'திருவோடு' வைத்திருந்தான். பிச்சைக்காரர்கள் பெரும்பாலும் மரத்தினால் செய்த ஒரு பாத்திரம் போன்ற ஒன்றினைக் கையில் வைத்துக்கொண்டு பிச்சைக் கேட்பது பழக்கம். ஏதாவது 'பிச்சை' போட்டால் அந்தத் திருவோட்டில் வாங்கிக் கொள்வார்கள்.

திருவோடு கையில் வைத்திருந்த அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்து திண்ணையில் உட்கார்ந்திருந்த பெரிய மனிதர் கேட்டார், “ஏனப்பா! எத்தனை காலமாக நீ பிச்சை எடுக்கின்றாய்? பிச்சைக்காரன் சொன்னான், "நான் ரொம்ப காலமாக பிச்சை எடுத்துத் தான் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறேன். இந்தத் திருவோடுதான் என்னைக் காப்பாற்றுகிறது." இதனைக் கேட்டவுடனே அந்தப் பெரியவருக்கு புதிய சிந்தனை ஒன்று தோன்றிற்று. இவனுக்கு ஏதாவது பொருளுதவி செய்தால் பிச்சை எடுக்கிற தொழிலை விட்டுவிட்டு ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக் கொள்ளுவான் என்று கருதினார். இழிவான பிச்சை எடுக்கும் பழக்கத்தை விட்டுவிடுவான் என்று எண்ணினார்.

உடனே அவனைப் பார்த்துச் சொன்னார். “ஏனப்பா, உனக்கு ஆயிரம் ரூபாய் ஒரு உதவி செய்யலாம் என்று இருக்கிறேன். நீ என்ன செய்வாய்?" உடனே அந்தப் பிச்சைக்காரன் சொன்னான், “தங்கத்தாலே திருவோடு செய்து கொள்ளுவேன்." இதைக் கேட்டவுடனே அந்தப் பெரியவருக்கு திடுக்கென்று அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது. ஏதேனும் தொழில் செய்து பிழைப்பான் என்று கருதியவர், அவன்