பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

அன்றும் இன்றும் என்றும் நிலைத்து நிற்கின்ற உயர்ந்த, உண்மைகளை ஆசிரியர் கூறியிருப்பதை உலகத்தில் பல்வேறு நாடுகளில் அறிந்துணர்ந்த அறிஞர்கள் மிகச் சிறப்பாக திருவள்ளுவனாரைப் பாராட்டுவதில் வியப் பொன்றும் இல்லை என்று கூறுவது மிகையாகாது.

மனித சமுதாயத்தில் வாழ்கின்ற மனிதர்கள், மனிதர்களாகவே வாழ்ந்துவிட்டால், யாருக்கும் எந்தக் காலத்திலும் துன்பம் வராது. மனிதனாகவே வாழ வேண்டும் என்பதற்கு என்ன பொருள் என்றால், மனித தன்மைகளுடன் - மனித குணங்களுடன் - எப்பொழுதும் வாழவேண்டும் என்பதே ஆகும். கல்வி கற்பதும், அறிவை வளர்ப்பதும், இல்லறம் நடத்துவதும் -ஆக இன்ன பிற செயல்களுக்கெல்லாம், காரணம் என்னவென்றால், மனித குணங்களையும், ஒழுக்கத்தினையும் வளர்த்துக் கொள்ளுவதே ஆகும் என்று உணர வேண்டும்.

குணமே அடையாளம்

ஒரு மனிதனை மனிதன் என்று கூறுவதற்கு இந்தக் காலத்தில் என்ன அடையாளம் வைத்திருக்கிறோம் என்றால் அவனுடைய உறுப்புகளைப் பார்த்து முடிவு செய்வதே ஆகும். மனித தோற்றத்திற்கேற்றவாறு இருந்துவிட்டால் அவன் மனிதன் என்ற பெயருக்கு உரியவன் ஆகமாட்டான். மனித குணங்களே மனிதன் என்று சொல்லுவதற்குக் . காரணங்களாக இருத்தல் வேண்டும்.

மனிதப் பிறவி எடுத்தும், மனித குணங்களே இல்லாமல் இருப்பவனைக் கயவன் என்ற பெயரினால் திருவள்ளுவனார் சுட்டிக் காட்டுகின்றார். தோற்றத்தில் மக்களைப் போலவே இருந்து கொண்டு பழக்கவழக்க குணங்களில்,