பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

திருவள்ளுவருடைய எண்ணங்களை எல்லாம் நன்றாக சிந்தித்துப் பார்க்கும்பொழுது, மனித சமுதாயம் துன்பம் இன்றி இன்பமாக வாழ்வதற்கு முதன்மையான-அடிப்படையான காரணமாக இருப்பது பண்பே ஆகும் என்பது தெளிவு. நல்லவர்கள் பிறந்த குடும்பத்தில் பிறந்து வந்திருப்பவர்கள் இயல்பாகவே நற்குணங்கள் பெற்றிருப்பார்கள் என்பது குறிப்பிட வேண்டிய இலக்கணம் ஆகும்.

மேலான சிந்தனைகளும் மற்றும் ஈகைத் தன்மைகளும் அற வாழ்க்கையும் இன்ன பிற தன்மைகள் எல்லாம் ஒன்று பட்டு இருக்கின்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நல்ல குணத்தவர் என்று சொல்லப்படும். அன்பு நிறைந்த மக்களை எல்லாம் மேலான குலத்தவர்கள் என்று கூறப்படும். நல்ல பேச்சுக்கள் பேசுவதும், தூய்மையான உள்ளம் பெற்றிருப்பதும், மற்றவர்களுக்கு உதவுகின்ற தன்மையினைக் கொண்டிருப்பவர்களைத் தான் மேலான குலத்தவர்கள் என்று ஆசிரியர் குறிக்கின்றார்.

நல்ல மக்கள் நிறைந்திருக்கின்ற குலத்தில் பிறந்தவர்களின் சொற்கள் எல்லாம் மற்றவர்களை மகிழ்விப்பதாகவே இருக்கும். தீயவர்களிடத்தில் பேசுகின்ற பொழுது சிறிது நேரத்திற்குள்ளாகவே இழிவான சொற்களும், கடுமையான சொற்களும் அவர்கள் பேச்சில் அடிக்கடி வருவதைப் பார்க்கலாம்.

நிலமும் சொல்லும்

திருவள்ளுவர் நிலத்தினை உதாரணமாகக் கொண்டு நல்லதொரு சீரிய கருத்தினைத் தெளிவாக விளங்குமாறு குறிப்பிட்டுக் காட்டுகின்றார். ஓரிடத்தில் இருக்கின்ற மண்ணின் குணம் என்னவென்று எவ்வாறு தெரிந்து கொள்வது? அதாவது, குறிப்பிட்ட ஒரு நிலத்தில் காணப் படுகின்ற மண் வகை --- மண்ணின் இயல்பு --- எத்தகையது