பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் மண்ணின் வகைகளை ஆராய்ச்சி செய்பவர்களைக் கூப்பிட்டுத் தான், கண்டு அறிந்து கொள்ள முடியும்.

மண் வகைகளின் ஆராய்ச்சி செய்பவர்கள் இருக்கும் இடத்திற்கு, இங்கே இருக்கின்ற நிலத்தின் மண்ணை எடுத்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அந்த மண்ணில் முளைத்திருக்கின்ற செடியினைப் பிடுங்கி எடுத்து அந்த முளையினை --- அந்த வேரின் பகுதியினை ஆராய்ச்சி செய்கின்ற --- அதாவது மண்வகை ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பினாலே போதுமானதாகும். மண்ணின் குணத்தினை - இயல்பினை -- தெரிந்து கொள்வதற்கு மண்ணை எடுத்து அவர்களுக்கு அனுப்புவதைவிட, அந்த மண்ணில் முளைத்திருக்கின்ற செடியின் முளையினை அனுப்பினாலே போதுமானதாகும்.

அதனைக் கொண்டே அந்த மண்ணை, ஆராய்ச்சியாளர்கள் - இந்த முளை இவ்வாறு இருக்க வேண்டும் என்றால், அது முளைத்திருக்கிற மண் எப்படிப்பட்டது என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள்; அதாவது ஒரு நிலத்தில் (பூமியில்) மண்ணை இன்னதென்று தெரிந்து கொள்வதற்கு அங்கே முளைத்திருக்கிற வேர் பெரிதும் துணையாக இருக்கும்.

வேர்கள்

செடியின் வேர் பலப்பலவாகப் போயிருக்கவும் கூடும். குறிப்பிட்ட அளவுக்கு ஆழமாகவும் சென்றிருக்கும். அதனால் தான் மண்ணின் தன்மையைப் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும். வேர்கள் ஆழமாகவும், பலவகையிலும் சென்றிருப்பதால் செடியினைப் பிடுங்குதல் வேண்டும்.