பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

நிலத்தின் தன்மையினை, அந்த நிலத்தில், கிடந்த வேர்கள் காட்டி விடுவது போல, ஒருவரின் சொற்களும், அவன் தன்மையினைக் காட்டிவிடுவதாகும். மண்ணில் கிடக்கும் வேரினைப் பார்ப்பதற்குச் செடியைப் பிடுங்கிப் பார்த்தல் வேண்டும் என்று சொல்லுவார்கள். இப் பொழுதுகூட ஒரு சிலர் பேசுகின்றபொழுது கோபமாக மற்றவனிடம் சொல்லுவார்கள் 'என் வாயைப்பிடுங்காதே?' இப்படிச் சொல்லுவதை நாம் கேட்பதுண்டு. அப்படி என்றால், ஆழமான உள்ளத்தில் இருந்து சொற்கள் வருகின்றன என்பது குறிப்பிட்டுக் காட்டப்பட்டது.

நடைமுறையில் பேசுகின்ற இந்த வழக்கத்தினைக் குறட்பா ஒன்று குறிக்கின்றது.

"நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.

பேசுகின்ற சொற்கள் எவ்வளவு பயனை அளிப்பவையாக இருத்தல் வேண்டும் என்கின்ற குறிப்பு இந்தக் குறட்பாவினால் நன்கு உணர்த்தப்பட்டது.

சொற்கள்

அதிகமான சொற்களைப் பேசவேண்டும் என்கிற எண்ணம் எல்லா நேரத்திலேயும் எல்லோருக்கும் இருந்து விடுதல் கூடாது. பேசுகின்ற சொற்களுக்கு வேகம் அதிகம் என்று அறிஞர்கள் சொல்லுவார்கள். நல்லபடி உபாக சொல்லப்படுகின்ற சொற்கள் உள்ளத்தைத் தொட்டு விடும் என்று பேசுவார்கள். அருமையான சொற்களைக் கேட்கின்றபொழுது உள்ளத்தைத் தைத்துவிட்டது என்று சொல்லுவதைக் காண்கின்றோம். ஆகையினால் சொற்களுக்கு நல்ல முறையிலும், அல்லது தீய முறையிலும், வன்மை அதிகம் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.