பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

தமிழ்நாட்டில் சிறந்த திருக்கோயில்களில் ஒன்றான பழநியில், 'போகர்' என்ற முனிவர் அடக்கமாகி இருக்கிறார். இன்றைய தினமும் பழநிக்குச் செல்லுபவர்கள் அதனை அறிந்து வருகிறார்கள். 'திருமூலர்' என்னும் முனிவர் சிதம்பரத்தில் அடக்கமாகி இருக்கிறார். சீர்காழி என்னும் திருக்கோயிலில் ‘சட்டமுனி' என்னும் சித்தர் அடக்கமாகி இருக்கிறார்.

அடங்கிய சித்தர்கள்

இவ்வாறே 'புலத்தியர்' என்னும் முனிவர் அடக்கமான பாபநாசம் என்னும் நகரமும், 'தன்வந்திரி' என்ற மகான் அடக்கம் செய்யப்பட்டுள்ள வைத்தீஸ்வரன் கோயிலும், 'கொங்கணவர்' என்னும் முனிவர் அடக்கமாகி உள்ள திருப்பதியும், 'அகப்பை சித்தர்', அடக்கமாகியுள்ள எட்டுக்குடியும், 'கோரக்கர்' என்ற முனிவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருக்கழுக்குன்றமும், 'கரூரார்' அடங்கியுள்ள தஞ்சாவூரும், 'குதம்பைச் சித்தர்' அடக்கமாகியுள்ள மைலாப்பூரும், சிறப்புடன் திகழ்ந்து வருவதைக் கண்கூடாகக் காண்கின்றோம்.

இவ்வாறே சுந்தரானந்தர் மதுரையிலும், பாம்பாட்டிச் சித்தர் திருக்கடையூரிலும், பாஞ்சாலி ராமேஸ்வரத்திலும், மச்சமுனி திருப்பரங்குன்றத்திலும், கமலமுனி திருவாரூரிலும், இடைக்காடர் திருவண்ணாமலையிலும், ராமதேவர் அழகர் மலையிலும், கும்பமுனி, குடந்தையிலும், அகத்தியர் அனந்தசயனத்திலும், நந்தீசர் திருவாவடுதுறையிலும், அடங்கி இருக்கிறார்கள் என்று சித்தர் நூல்களில் இருந்து நாம் காண முடிகிறது.