பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

நல்லவர் தீயவர்

மிகப் பெரிய உலகம் போற்றும் ஞானவான்களாக வாழ்கின்ற வாழ்க்கை நடத்தாவிட்டாலும், நல்ல குணத்துடன் பலருக்கும் பயன்பட்டு வாழ்கின்றவர்களைப் புதைத்த நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும் என்று உலகியல் உண்மையினை ஆசிரியர் கூறுகின்றார். பிறருக்கு இயன்றவரை உதவி செய்து வாழ்வது தான் மனிதனின் கடமை என்று அறிந்து வாழ்ந்து அதனால் புகழையும் சேர்த்துப் பெருமை அடைய வேண்டும்.

மோசமாகவும், பழிபாவங்களுக்கு ஆளாகியும், கெட்ட பெயர் வாங்கியும், வாழ்ந்த ஒருவன் இறந்த பிறகு அவன் உடலைப் புதைத்த இடத்தில் ஏற்கனவே நல்ல விளைச்சல் இருந்தாலும், இவனைப் புதைத்த பிறகு விளைச்சலே இல்லாமல் போகும் என்கிறார் திருவள்ளுவர்.

உலக மக்களில் பலர் தீய பழக்கங்களைக் கொண்டு மதுபானம் அருந்திக் கெட்டுவிடுவதைப் பார்க்கின்றோம். குடிக்கின்ற பழக்கம் உள்ள அவர்கள் சென்று மதுபானம் அருந்துகின்ற மதுக் கடைகள் எந்த இடத்தில் அமைக்கப் பட்டிருக்கின்றன என்றால், பாவிகளாக வாழ்ந்த தீயவர்கள் இறந்த பிறகு அவர்கள் உடம்பினைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற இடங்கள் தான் என்று கூறுவது மிகையாகாது.

பயன் குன்றும்

ஏ! மனிதனே! உன் வாழ்க்கை முடிந்த பிறகு உன்னுடைய உடம்பினைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற நிலத்தில் நல்ல விளைச்சல் விளையுமாறு நீ வாழக் கூடாதா" என்பதே இங்கு சுட்டிக் காட்டப்படும் பெரிய உண்மையாகும். -- நல்ல தொண்டு செய்து புகழ் சேர்க்காமல் தீயவனாக வாழ்ந்தவர்கள் உடம்பைச் சுமந்து கொண்டிருக்கின்ற நிலம் விளைச்சல் இல்லாமல் குன்றி