பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78



உள்ளத்தில் உள்ளான் அடி---அதுநீ
உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாய் எனில்---
கோயில் உள்ளேயும் காண்பாய் அடி.

ஆதலால் மனத்தினை நல்ல சிந்தனைகள் இருக்குமாறு -வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணம், சிந்தனை, உணர்ச்சி என்பனவெல்லாம் மனத்தில் தான் தோன்றுகின்றன. "மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி என்றார் ஆசிரியர் திருவள்ளுவனார்.

இறைவன் இருக்கின்ற இடத்தினைச் சொல்லுகின்ற பொழுது 'மனத்து அகத்தான்' என்றுதான் பாடிவைத்தார்கள். அதாவது மனம் என்கிற வீட்டினை இருப்பிடமாகக்கொண்டு இருப்பவன் இறைவன் என்பது பொருளாகும்.

ஒரு ஊரில் பெருமையுடனும், நிறைந்த செல்வாக்குடனும் இருந்த உயர்ந்த பெரிய மனிதர் ஒருவர் நண்பர் வீட்டிற்கு வருவதாகச் சொல்லியிருந்தார். அப்படிப்பட்ட பெரிய மனிதர் தம்முடைய வீட்டிற்கு வருவதாகச் சொல்லிவிட்டாரே என்பதை அறிந்து நண்பர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார், அவருடைய வருகை தன்னுடைய வீட்டிற்கு மிகுந்த பெருமையினைக் கொடுக்கும் என்று அவர் உறுதியாக நினைத்தார். அத்தகைய பெரிய மனிதர் தம்முடைய வீட்டிற்கு வருவது அருமையிலும் அருமையான நிகழ்ச்சி என்று கருதினார்.

உடனே அவருடைய மனைவியிடம் சென்று அந்தப் பெரிய மனிதர் வருகின்ற செய்தியினை எடுத்துச் சொன்னார். அந்த அம்மையாருக்கு அளவில்லாத 'மகிழ்ச்சி. அவ்வளவு பெரிய மனிதர் திருவடிகள் நம் வீட்டில் படப்போகிறதே என்று அவருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வீட்டினை மிகமிகச் சுத்த