பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

எச்சம் நன்றாகும்

'மனம் தூய்மை, செய்வினை தூய்மை' என்பதும் திருவள்ளுவர் வாக்கேயாகும். 'மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும்' என்றும், 'மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம்' என்றும், மன நலத்தின் ஆகும் மறுமை' என்றெல்லாம், மனத்தின் உயர்ந்த சிறப்பினைப் பற்பல இடங்களில் ஆசிரியர் திருவள்ளுவனார் கூறிச் செல்லத் தவறியதே இல்லை.

மனத்தினை நல்லபடியாக வைத்திருப்பதற்கு என்ன வழிகள் என்பதனைச் சான்றோர்கள் வாயிலாகக் கேட்டும், மூதறிஞர்கள் நூல்களிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்.

நண்பர் தவசி

நல்லபடியாக குடும்பம் நடத்திக்கொண்டு வந்த. ஒருவருக்குக் குடும்பத்தில் குழப்பமும், கலக்கமும், திகைப்பும் ஏற்பட்டுவிட்டன. என்ன செய்வது என்று புரியாமல் வேதனைப்பட்டுக்கொண்டு இருந்தார். துன்பத்தில் துடித்துக் கொண்டிருந்த அவருக்கு அவருடைய நண்பர் ஒருவரின் நினைவு வந்துவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பதாக இவரோடு பழகிக் கொண்டிருந்த அந்த நண்பர் துறவறம் பூண்டு பேரின்பத் துறையில் வாழ்க்கை நடத்திக் கானகத்திற்குச் சென்று விட்டார். இல்லறத்தார் வாழும் நகர் பகுதிகளுக்கே அவர் வருவதில்லை.

துன்பப் பட்டுக் கொண்டு இருந்த இந்த நபருக்கு அந்தத் துறவற நண்பரின் நினைப்புத்தான் வந்தது. இவரும் துறவறத்தை மேற்கொள்ளுவோம் என்று நினைத்துவிடவில்லை. அவரிடம் சென்றால் அவர் நல்ல பல வழிகளைச் சொல்லி மன அமைதிக்கு வழிகாட்டுவார் என்று எண்ணியே அவரைப் பார்க்கச் சென்றார். காட்டிற்குள் தொலை தூரம் சென்று பல இடங்களிலும்,