பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அலைந்து திரிந்து எப்படியோ அந்த நண்பரைக் கண்டு பிடித்து விட்டார்.

அவர் தற்பொழுது பெரிய மகானாகக் காட்சி அளித்தார். அந்த மகான் இளம் வயது முதற் கொண்டே தெய்வ பக்தியிலும், ஆன்மீகத் துறையிலும் சிறந்த சடுபாடு கொண்டிருந்தபடியால் இல்லறத்தை மேற்கொள்ளாமல் பல நாட்கள் தவம் செய்து முதிர்ந்த நிலை அடைந்து இருந்தார். எல்லோரிடத்திலும் எளிமையாகப் பேசிப் பழகுகின்ற தன்மை அவரிடம் மிகுதியாக இருந்தது.

நண்பர் வரவேற்பு

எல்லா நண்பர்களையும்விட தற்பொழுது அவரைத் தேடிக்கொண்டு வந்த நண்பர் இளமை முதற்கொண்டே மிகமிக நெருக்கமானவர் ஆனபடியால் இவரை எதிர்பாராமல் கண்டவுடனே அவருக்கே மகிழ்ச்சி பொங்கிவிட்டது. பழைய நண்பனை, புன்முறுவலோடு வரவேற்றார். கனிவோடு பேசினார். அன்புடன் அழைத்து அருகில் உட்கார வைத்து, "எல்லோரும் நலம்தானே?" என்று விசாரித்தார்.

அதற்கு நண்பர் உடனடியாக ஒன்றும் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்த நண்பரை அந்தத் துறவி, கை சாடையினால் என்னவென்று கேட்டார்.

உடனே நண்பர், "சுவாமிகளே! அடியேனுக்குப் பெரிய துன்பங்கள் எல்லாம் வந்துவிட்டன. இல்லற வாழ்க்கையில் தாங்க முடியாத வேதனைப் பட்டுவிட்டேன். மன அமைதி கிடைக்கும் என்றே தங்களிடம் வந்தேன்" என்று சொன்னார்.

உடனே சாமியார் நண்பரைப் பார்த்து, "முதலில் ஏதேனும் உணவு சாப்பிடுங்கள், பிறகு பேசலாம்" என்று