பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

உண்டாகிவிட்டது. நண்பர் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். சில விநாடிகள் கழிந்தன.

அந்தக் குரங்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பார்த்து விட்டு, தாவிக்கொண்டு நண்பர் தோள் மேல் போய் உட்கார்ந்து கொண்டது. அந்த நண்பர் குரங்கு விளையாடுகிறது என்று நினைத்தார். குரங்கு அன்போடு தன்னிடம் பழகிக் கொள்ளுகிறது என்று எண்ணினார். (கொஞ்ச நேரம் கழித்த பின் அந்தக் குரங்கு தன்னுடைய ஒரு விரலை அவருடைய காதிற்குள் விட்டது.

விளையாட்டு

அப்பொழுது கூட இதுவும் விளையாட்டுத்தான் என்று நினைத்துச் சிறிது சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார். மறுபடியும், அந்தக் குரங்கு நண்பரின் தலை முடியை கொஞ்சமாகப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது. நண்பருக்கு வலித்துவிட்டது. இதுவும் விளையாட்டு என்று நண்பரால் நினைக்க முடியவில்லை. குரங்கு சேட்டை செய்கிறது என்று தெளிவாகப் புரிந்து கொண்டார்.

தன்னுடைய சாமியார் நண்பரைப் பார்த்து சொன்னார், “தாங்கள் பழையபடி தங்கள் வேலையைத் தொடங்கினால் நல்லது." அதைக் கேட்டு சாமியார் சிரித்தார், நண்பர் சொன்னார், சாமிகளே! நான் தெரியாமல் சொல்லிவிட்டேன், மன்னித்து விடுங்கள், என்றார்.

சாமியார் சொல்லுகிறார், “அப்பா, சாதாரணமான இந்தக் குரங்கே சிறிது நேரம் கவனிக்காமல் விட்டு விட்டால் எவ்வளவு சேட்டை செய்கிறது என்பது புரிந்து கொண்டாய் அல்லவா? இதைவிட பேய்க் குரங்கு என்று .ஒன்று இருக்கிறது. அது உனக்குத் தெரியுமா?" 'தெரியாது' என்று அந்த நண்பர் சொன்னார். கேட்டவுடன் சாமியார் திருவாய் மலர்ந்தருளினார். -