பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

பேய்க் குரங்கு

"மனம் எனும் ஓர் பேய்க் குரங்கு" --- மனத்திற்குத் தான் பேய்க் குரங்கு என்று பெயர். பலமான கைத்தடியினால் அந்தக் குரங்கின் தலையில் அடித்துக் கொண்டிருந்தேனே, அதுவே போல் மனம் என்கிற பேய்க். குரங்கினை அடக்குவதற்கு மகான்கள் சொல்லியுள்ள மறைமொழிகள் எனப்படும் மந்திரங்களை நாவினால் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இதைத் தான் மனத் தூய்மைக்கு மார்க்கம் என்று ஞானிகள் சொல்லி வைத்தார்கள்.

மந்த்ர ஜபம், தியான முறை என்பவைகள் கரைந்து பிரணவ வடிவத்தில் கொண்டு நிறுத்தி, (ஓசை) ஓலி எனப்படும் நாதத்தினைக் கேட்குமாறு செய்யும் என்று சொன்னார்கள். நாதமாகிய அந்த ஓசை ஒளிமயமான அந்தக் காட்சியைக் காணுமாறு செய்யும் என்று சாமியார் விளக்கம் அளித்தார். அதாவது மணம் மலரிடம் கொண்டு செல்லுவது போல், ஓசை ஒளிமயமான காட்சியினைக் கொண்டு காட்டும் என்ற உண்மை பெறப்பட்டது.

ஓசையும் ஒளியும்

"ஓசையின் உள்ளே உதிக்கின்றது ஒன்று உண்டு, வாசமலர் நாற்றம் போல் வந்து என்று மூதாட்டியார் பூலோக கலைமகள் என்று அழைக் கப்படுகின்ற அவ்வை பிராட்டியார் "ஞானக் குறள்" என்ற நூலில் மிகச் சிறப்பாகச் சொல்லி வைத்திருக்கிறார். இந்த ஞானக் குறட்பாவில் பல நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய தத்துவம் அடங்கி இருக்கின்றது.

மக்களாகப் பிறந்தவர்களுக்கு இருக்க வேண்டிய நல்ல குணங்களிலே ஒன்று மற்றவர்கள் சொல்லுகிற புத்திமதிகளைக் கேட்க வேண்டும் என்கின்ற பழக்கமாகும். நமக்கு