பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

எல்லாம் தெரியும் என்கிற எண்ணம், யாருக்கும் எந்தக் காலத்திலும் உண்டாகக் கூடாது.

அநுபவம் என்கின்ற பள்ளியில் படித்த பெரியவர்களின் புத்திமதிகள் மிகப் பெரிய பயன்களைத் தரும். தாய் தந்தையர் சொல்லுகின்ற புத்திமதிகளைப் பிள்ளைகள் கேட்கவேண்டும். ஆசிரியர் சொல்லுகின்ற புத்திமதிகளை மாணவர்கள் கேட்கவேண்டும். மூத்தவர்கள் சொல்லு கின்ற புத்திமதிகளை எல்லோரும் கேட்கவேண்டும்.

சிலருக்குப் புத்திமதிகளைக் கேட்கின்ற பழக்கம் அறவே கிடையாது. சிலர் பேசும்போது அறியாமை மிகுதியினால் புத்திமதிகள் சொல்ல வருகிற பெரியவர்களைப் பார்த்துச் சொல்லுவார்கள். நீங்கள் எனக்கு ஒன்றும் சொல்ல வேண்டாம், எனக்குத் தெரியும் எப்படிக் கெட்டுப் போவது என்று! அவ்வையார் கூறிய இந்த இரண்டு அடிகளில் எத்தனை உண்மைகள் பொதிந்திருக்கின்றன என்பதை. ஆராய்ந்து அறிய வேண்டும்.

மணமும் மலரும்

ஒருவர் பூந்தோட்டத்திற்குள் சென்றார். சிறிய பாதையின் வழியாகச் செல்லுகின்ற பொழுது 'கமகம' என்று மணம் (வாசனை அவர் மூக்கிற்குள் நுழைந்தது.) அங்கேயே நின்றார், மேலும் மேலும் மலரின் மணம் வந்து கொண்டே இருந்தது. அவருக்கு ஒரு தனிச் சிறப்பு இன்பம் உண்டாயிற்று. உடனே மலரை உற்று நோக்கினார். மலரைக் காணோம்! மலர் இருக்குமிடம் தெரியவில்லை. மலர் இல்லாமலா, மணம் வரும்? மணம் வந்து கொண்டே இருந்தது. உடனே மணம் வந்த திசையை நோக்கிச் சென்றார்,

செடிகளை மெதுவாக விலக்கியும், மணத்தைக் கொடுக்கிற மலரை பார்த்துக்கொண்டும் சென்றார்,