பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

கொண்டு ஒரு குச்சியினால், அந்தக் குரங்கினை ஆட்டுவித்துக்கொண்டு இருந்தார். அந்தக் குரங்கும் அவர் சொல்லுகிறபடியே ஆடிக்கொண்டிருந்தது. குரங்காட்டி சொல்லுகின்றபடியெல்லாம், அந்தக் குரங்கின் ஆட்டம் நடைபெற்றது. இதை அந்த மகான் உற்று நோக்கினார்.

குரங்கு ஆட வைக்கிறது

பிறகு அந்த வழியே நடந்து சென்றார். அங்கு கண்ட காட்சி, அவரை அதிர்ச்சி அடையுமாறு செய்து விட்டது. அங்கே ஒரு வயதான கிழக் குரங்கு ஒன்று உட்கார்ந்து கொண்டிருந்தது. எதிரிலே, ஒரு ஆள் அந்தக் குரங்கு சொல்லுவதுபோல் ஆடிக் கொண்டிருந்தான். என்ன வியப்பு? கிழக்குரங்கு இப்படி எல்லாம் ஆட்டிவைக்கிறதே என்று அந்த மகான் வேதனைப்பட்டார்.

இக்கருத்தில் கற்பனை என்பது நிழலாட்டம் செய்து காட்டினாலும், மனித வாழ்க்கையில், மனம் என்கின்ற ஒன்று எவ்வளவு துன்பத்தினை உண்டாக்குகின்றது என்ற உண்மை வெளிப்படையாக விளங்குகின்றது. இந்த அரிய கருத்தினை, வள்ளலார் அருளிய அருட்பாவில் ஒரு பாடலில் காணுகின்றோம்----

"தேட்டக் கண்டேர் மொழிப் பாகா உலகில்
சிலர் குரங்கை ஆட்டக் கண்டேன்
அக்குரங்கால் அவர் சற்றும் ஆடக்கேட்டுக் கண்டேன்
அல்லேன்
நானோ ஓர் ஏழை வஞ்ச நெஞ்சக் கிழக்குரங்கால்
வேட்டுக் கொண்டு ஆடுகின்றேன். இது சால வியப்பு.

இப்பாடலில் நெஞ்சத்தினை எவ்வளவு தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேருண்மை உணர்த்தப்பட்டது. மனத்திற்கு அவர் வைத்த பெயர் 'வஞ்ச நெஞ்சக் கிழக் குரங்கு' என்பதாகும்.