பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

பசுவும் புலித்தோலும்

ஒரு பசு மேய வேண்டும் என்று ஒரு தோட்டத்திற்குச் சென்றது. அப்படி மேய்ந்தால் அந்தத் தோட்டக்காரன் அடித்து விரட்டுவான் என்று அந்தப் பசுவுக்கு அச்சம் இருந்தது. அதற்காக அந்தப் பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு அந்தத் தோட்டத்திலே மேய்ந்தது. அதற்கு என்ன எண்ணம் என்றால், புலி என்று நினைத்துக் கொண்டு அந்தத் தோட்டக்காரன் ஓடிவிடுவான் என்பதே யாகும். புலி புல்லைத் தின்னாது என்கிற உண்மையைத் தெரிந்து, ஏதோ கள்ளத்தனம் நடக்கிறது என்று அறிந்து அந்தத் தோட்டக்காரன் தன்னைத் தடியால் அடித்து விரட்டுவான் என்பதை அந்தப் பசு மறந்துவிட்டது. மற்ற ஒரு உண்மையையும் தெரிந்துகொள்ள வேண்டும், மற்றவர்களை ஏமாற்றுவதற்காகவே புலித்தோல் போர்த்திக் கொண்டதே அல்லாமல், புலிக்கு இருக்கிற பலமும், அச்சமின்மையும் இந்தப் பசுவுக்குக் கிடையாது. தோட்டக்காரன் தடியால் அடிக்க வந்தால், இந்தப் பசு ஓடுமே அல்லாமல், புலித்தோல் போர்த்திய காரணத்தினால், அவனைக் கடித்து துன்புறுத்த முடியாது.

போலிகள்

உலகில் பல வஞ்சகர்கள் சாமியார் வேடம் போட்டுக் கொண்டு வஞ்சனையாக சிந்தித்து சிற்றின்ப வேட்கையினை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பார்கள். இதைத் தெரிந்து கொண்ட மற்றவர்கள் அவனை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினால், சாமியார் வேடம் போட்ட காரணத்தினாலே மற்றவர்களைப் பார்த்து 'பிடி சாபம்' என்று அவனால் சொல்ல முடியாது. கொடுக்கின்ற அடி தாங்காமல் சத்தம் போட்டுக் கொண்டு ஓடி விடுவான். அதனால் தான் கடுகளவேனும் பலமில்லாதவன் பலமுள்ளவனைப் போல் காட்டுகின்ற காட்சி பசுவினைக்