பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • தொகுக்கப்பட்ட, ஒன்றுபடுத்தப்பட்ட உரிமையான உழைப்பைத் தவிர வேறு ஆற்றலால் மனிதனை மிக உயர்ந்தவனாகவும், பேரறிவாளனாகவும் ஆக்க முடியாது. மாக்சிம் கோர்கி
  • உழைப்பாளியின் உடல் ஆற்றல்களினால் வியப்புகளை விளை விக்க இயலும். மாக்சிம் கோர்கி
  • எதிர்காலம் நேர்மையாக உழைக்கும் மக்களுக்கு உரிமையானது. மாக்சிம் கோர்கி
  • அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்று சேர்க்கும் ஒர் ஆற்ற லாக உழைப்பு நம்மைச் செய்துள்ளது. வி.இ.இலெனின்
  • உழைப்பாளியிண் உழைப்பு, உழவர்களின் பயிர் . இவை இரண்டும் வாழ்க்கையெண்னும் வண்டி அதிக விரைவில் செல்ல உதவும் காலச் சகடங்களாகும். விளாடிமீர் மயாகோல்ஸ்கி
  • சமுகத்தின் செல்வமனைத்தும், அனைத்துமே, இச் சமூகத்தின் உழைப்பாளிகளுக்குத் திரும்பச் சென்றடைய வேண்டியவை.

திமிட்ரி பிசரேவ்

  • உழைக்கும் மனிதனுக்கும், அவன் உழைக்கும் சமுக்த்திற்கு மிடையேயான வலிமை மிகுந்த, மிகுந்த நம்பத் தகுந்த இணைப்பு உழைப்பேயாகும். திமிட்ரி பிசரேவ்
  • உழைப்பு என்பது எப்போதுமே மனித வாழ்க்கையின் பண்பாட்டின்

எல்லைக் கல்லாக இருந்து வந்துள்ளது.

ஆண்டன் மெகரெண்கோ

  • கடின உழைப்பு, மனிதனின் உழைப்பு, அனைத்தையும் செய்து முடித்து, குறிக்கோள்கள் அனைத்தையும் எட்டச் செய்யும்; வரலாற்றின் நோக்கம் அத்தகையதாகும்.

திமிட்ரி மென்டேலயேல்

101