பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

ஏதோவொன்றினைச் செய்து முதல் அடியை எடுத்து வை.

இலியோ தோல்கதாய்

  • நீ விரும்பியதைச் செய்வதில் மகிழ்ச்சி இருப்பதில்லை; நீ செய்

வதை விரும்புவதிலேயே மகிழ்ச்சி உள்ளது.

இலியோ தோல்கதாய்

ஆர்வமும், பெருமகிழ்ச்சியும் இன்றிச் செய்யப்படும் எந்த வேலை யும் செழிப்பாகாது. இவான் பவலோவ்

  • ஒரு கடினமான பணியைச் செய்ய முற்படும்போது, பரபரப்பு / காட்டாதே. உனது ஆற்றல்களை ஒருங்கிணைப்பதற்குத் தேவை யான நேரத்தை உனக்கு நீயே அளித்துக் கொண்டு, பரபரப்பைத் தவிர்த்து விரு. இவான் பவலோவ்
  • ஒவ்வொரு செயலை மேற்கொள்ளும்போதும், அதில் மிக இன்றி யமையாத பகுதி என்னவென்றால், அதனைத் தொடங்குவதற் கான தயக்கம் நிறைந்த நேரத்தை வெற்றி கொள்வது என்பதே யாகும். இவான் பவலோவ்
  • நீ விரும்பாவிட்டால், எந்தப் பணியுமே கடினமானதாகவே இருக்கும்; அது பயனர் நிறைந்தது; இன்றியமையாதது

என்பதை நீ அறிந்திருந்தால், அது எளிதானதாக இருக்கும்.

ஜி.வி.பிளக்னோவ்

  • நீ செய்யும் நல்லவை கடினமானதாக இருந்தாலும், அந்தக் கடினத் தன்மை கடந்தபின், நற்தன்மையே நிலைத்திருக்கும். நீ செய்யும் கெட்டவை மகிழ்ச்சியளிப்பதாக இருப்பினும், அந்த மகிழ்ச்சி கடந்தபின், கெட்டவையே நிலைத்து நிற்கும்.

மைக்கேல் லோமோனோசோவ்

  • சோர்வற்ற உழைப்பு அனைத்துத் தடைகளையும் கடந்து வெற்றி கொள்கிறது. மைக்கேல் லோமோனோசோவ்

106