பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் •o த. கோவேந்தனர்

பொன் வண்டாய் இருந்த நான் புற்றிசல்களின் இடையே உலவிட மறுத்தேன். அதனால் மேற்கண்ட நூலின் மொழி பெயர்ப்பும் விடுபட்டது. என்றாலும் அச் சிந்தனைச் செம்மலர்களை எனக்குத் தேவையான போது என் பிற நூல்களில் அங்கும் இங்குமாக மொழிப் பெயர்த்து இணைத்தேன்.

இந் நூலின் புத்தெண்ணக் கருத்துகளை நம்ப வேண்டும் என்று நான் வற்புறுத்தவில்லை. தன்னையே அறிந்து கொள்ளும் அறிவியல் உலகத்தில் ஓர் அறிவியல் வாணன் இந்த வெளி உலகத்துப் பொருள்களில் ஒவ்வொன்றையும் ஆய்ந்து ஆழ்ந்து அறிந்து கொள்ளும் அறிவியல்வாணனாக இருக் கிறானோ அவ்வாறே அறவியல் அறிஞர்களாகவும் நாம் மாற வேண்டும் என விரும்புகிறோம். அப்போதே பூங்குன்றனை, வள்ளுவனை, மார்க்சை, இலெனினை, தோல்கத்ாயை, மார்க்சிம் கோர்க்கியையும் மற்றவர்களையும் தேடுதலைவிட்டு மெய்யறிவு இன்பத்தை அடையக்கூடும். வாழ்வியக்கம் மீமிசை மாந்தரைப் பெற்றெடுத்து உவக்கும் என்ற எண்ணத்தாலேயே இந் நூலை முற்றுமாக மொழி யாக்கம் செய்தேன். இம் மொழி பெயர்ப்பில் என்னை ஊக்குவித்த என் மகள் த. சித்திராவிற்கும் நூற்ப்டியினை ஆங்கில மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துச் செம்மை செய்து தந்த ஆங்கிலப் பேரறிஞர் புத்துலகச் சிந்தனையின் பண்பாளர் திரு.த.க. பாலகிருட்டிணன் அவர்களுக்கும் என் நெஞ்சுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் புதியதோர் உலகைக் கட்டி வருகிறோம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகிற்கான புதிய சமுதாயத்தைக் கட்டி வருகிறோம். வி.இ.இலெனின் அவர்களின் இடிமுழக்கம் போன்ற உறுதிப்பாடுடைய சிந்தனைகளும் உண்டு; வாழ்க்கை புத்துயிர் அடைவது என்ற கருத்தையும், மானுடத்தின் நன்மைக்காக

9