பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

வேலையே இன்பமும் மகிழ்வுமாகும்

  • வேலையென்பது நாளினை ஒரு கொண்டாட்டமாக மாற்றிவிடு

கிறது. ஜானிஸ் ரெய்னிஸ்

  • மகிழ்ச்சியெண்பது உனது பணியின் நற்தன்மையாகும்.

ஜானிஸ் ரெய்னிஸ் * வேலையைத் தவிர வேறெதுவும் மனிதனுக்கு மகிழ்ச்சியையும், அவனது உயிர்க்குத் தெளிவினையும், இன்பத்தையும், நிறைவை யும் அளிப்பதில்லை. விசாரியோன் பெலின்ஸ்கி

  • அனைத்து மகிழ்ச்சிக்கும், உலகில் உள்ள சிறந்தவை அனைத்துக் கும் ஊற்றுக் கண் வேலையே. மாக்சிம் கோர்கி
  • வேலையின் சிக்கல் நிறைந்த, உயிர் சார்ந்த, வலிமை மிக்க ஆற்றலே மனித இனத்தின் மதிப்பிற்கும், ஒழுக்க நெறிக்கும், மகிழ்ச்சிக்குமான ஒரே அடிப்படையாகும்.

காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி * வேலை, கடினமான, மகிழ்ச்சி நிறைந்த வேலையைத் தவிர

வேறெதனாலும், உள்ளுயிர்க்கு வலிமையை ஊட்ட இயலாது.

அலெக்சாண்டர் எர்சன்

  • ஒரு மனிதன் தனது நெஞ்சத்தைத் தனது வேலையில் வைக்க வில்லையெனில், அதாவது, தனது நெற்றி வியர்வை சிந்தி, ஒருவன் தனது உணவை ஈட்டாவிட்டால், பின்னர் மகிழ்ச்சியாக இருக்க அவனால் இயலாது. திமிட்ரி பிசரேவ்
  • மித்ந்த ஆவலைத் துண்டும் தவறுகளில் ஒன்று, மனிதன் செய லற்று அமைதியாக இருப்பதினால் மகிழ்ச்சிகொள்கிறான் என்று எண்ணுவதேயாகும். இலியோ தோல்கதாய்
  • மகிழ்ச்சிக்குப் போட்டியிட இயலாத கட்டளை வேலையேயாகும். முதலில் ஒருவன் மிகவும் விரும்பும், விடுதலையான வேலை -

109